Archive for November 2009

கல்லூரி அனுபவங்கள் :JMC திருச்சி----2

 (தொடர்ச்சி) வீட்டுக்கு போனா எந்த காலேஜ் செலக்ட் பண்றதுன்னு பிரச்சனை,நான் coimbatore பக்கம் எதாவது காலேஜ் போகலாம்னு சொல்ல,
எங்க அம்மாவும்,தாத்தாவும்(மிரட்டல்!asusual) சதக் (கீழக்கரை) நல்ல காலேஜ் ,முஸ்லீம் காலேஜ் ,வாரத்துக்கு மூணு தடவை பிரியாணி போடுவாங்கனு சொல்லி (அன்னைக்கு புடிச்சது சனி)அந்த college ஐ தேர்ந்தெடுக்க வைத்தார்கள்.என் சொந்தக்காரங்க யாரோ சொன்னங்க "City சைடு படிக்க போன புள்ள கேட்டுபோயிடும்"(க்கும்).

          குடும்பத்தில் மூத்த பையன் ஆதலால் எப்பவுமே,எல்லாவற்றிருக்குமே நான் தான் "experimental rat", campus interview,lab facilities etc. எதை பற்றியும் பிரக்கை இல்லாமல்/தெரியாமல் கொஞ்சம் சந்தோஷமாக,சென்னை-பூக்கடை சரவணபவனில் புல் மீல்ஸ் சாப்பிட்டு விட்டு ஊருக்கு பஸ் ஏறினேன் (ராஜேஷ்குமார் பாணியில்:வாழ்கையில் பெரிய சூறாவளி வீசப்போகிறதேன்று தெரியாமல்....)

           பின் ஒரு நாளில் திருச்சி போய் Princi இடம் நின்ற போது எந்த பிரச்சனையும் பண்ணாமல் "NOC" தந்தார்,பின் TC வாங்கிகொண்டு 70% feeசும் வாங்கிகொண்டு,hostel மேட்ஸ் இடம் விடை பெற்று கொண்டு ஒரு வழியாக ஊருக்கு வந்து சேர்ந்தோம். (கண்டிப்பா தொடரும்...வுடமாட்டேன்)

பி.கு:TC வாங்க ஆபீஸ் கவுன்ட்டர் கிட்ட Q வில் நிற்கும் போது எனக்கு முன் சில seniors பீஸ் கட்ட நின்றுருந்தார்கள்,அவர்கள் turn வரும் போது பழக்கப்பட்ட accountant என்ன தம்பி மீசைய காணோம் என்றதும் உடனே அவன் அது பின்னாடி லாரில வருது சார் என்றான் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு ,எரிச்சலான அக்கௌன்டன்ட் இது சரியில்ல,அது சரியில்லன்னு அவன திருப்பி அனுப்பி விட்டார்.பின்னாளில் exam fees கட்டி,exam எழுதியிருப்பானோ என்னவோ தெரியவில்லை.

கல்லூரி அனுபவங்கள் :JMC திருச்சி----1

+2 result வந்து சில நாட்களில் என் தாத்தாவின் சொல்படி(மிரட்டல்!) திருச்சி ஜமால் முகம்மது collage இல் (தேவையே இல்லாமல் ) BCA சேர்ந்தேன்.
1000 திற்கு மேற்பட்ட மதிப்பெண் ஆதலால் எளிதாக இடம் கிடைத்து விட்டது.

                   முதல் நாள் Prof. வந்து "good morning sir எல்லாம் வேண்டாம்பா,எழுந்து நின்றாலே போதும்" என்ற போதும் சில நாட்கள் சில பேர் அதையே செய்து கொண்டிருந்தோம்."Introduce yourself"இன் போது என் 12th மார்க் கேட்டுவிட்டு பல பேர் "அட கிறுக்கா,அவ்ளோ mark எடுத்துட்டு இங்க ஏன்ல வந்த" என்ற மாதிரி பார்த்தார்கள்.வாத்தியார் கூட "ஏன்பா Engineering ல interest இல்லையான்னார்"."அப்படியெல்லாம் இல்ல sir"னு வழிஞ்சுகிட்டே உக்காந்துடுவேன்.

        அப்ப நான் ரொம்ப நல்ல பையன் (ச்சு..ச்சு இதுக்கெல்லாம் அழக்கூடாது) college விட்டு வந்தா புக் (crime novels,சுபா,PKP etc.) எடுத்துகிட்டு உக்காந்துடுவேன்.ஆனால் என் ரூம் mates 8 பேரும் ,நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு St.Josephs,IG college,மலைகோட்டை பக்கம் கிளம்பிடுவாங்க.திரும்ப வரும்போது அட்டயில்லாத அதில் அதிகம் ஆடையில்லாத பெண்களுடைய photos தாங்கிய புத்தகங்களை வாங்கி வருவார்கள்.நைட் அதை சத்தம் போட்டு (ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கதை) படித்து தொலைப்பார்கள்.

         பின் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் பழகி ,அப்படியே மாமன்,மச்சான்னு கூப்பிட ஆரம்பிச்சு ,வாத்தியார்களை வந்துட்டாண்டா வண்ணாரபேட்டை தலையன் (வழுக்கை) னு கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சு.....மெஸ்சுல "அண்ணே,கொஞ்சம் தள்ளி உக்காருங்கன்னு" seniors கூட கலக்க ஆரம்பிச்சு .....கிரௌண்ட்ல,என்னாண்ணே short ball போட்டுடிங்கன்னு எகிற ஆரம்பிச்சு.......ஒரு நாள் தோஸ்த் படம் போய் தெனாவட்டா உக்கார்ந்து படம் பார்த்துட்டு ,அங்க ஒரு husband & wife கூட சண்ட போட்டுட்டு (நான் இல்லைங்க),நைட் ரெண்டு மணிக்கு நடந்தே சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து hostel வரை வந்தோம் .

     Monthly டெஸ்ட்,cricket team selection னு கொஞ்சம் கொஞ்சமா involvement வரும்போது திடீரென்று councelling card வந்துருக்குனு வீட்ல கெளம்பி வரச்சொல்லிட்டாங்க....(கண்டிப்பாக தொடரும்)

பார்த்ததில் ரசித்தது

கண்களுக்கு நேரே ஒரு துப்பாகியை நீட்டி சுடபோவதாக அச்சுறுத்தும் போது(serious matter எழுதுனாலே தூய தமிழ் வந்துடுது) எந்தவித expressionsம் இல்லாமல் அதை பார்த்து சிரித்து கொண்டே இருக்க முடியுமா? அப்படி இருக்க முடியுமென்றால் அதற்கு எவ்வளவு மனதிடம் வேண்டும் !இப்படி ஒரு சீன் சென்ற வாரம் "கோலங்கள்" தொடரில் பதிவாகி இருந்தது,அதில் தோழர் பாலகிருஷ்ணன் அருமையான நடிப்பை வெளிப்படுதியிருந்தார்(always he) and it resembles something. அதுவும் அதற்கு முந்தைய sceneஇல் "shave" செய்து fresh ஆன முகத்துடன் "அவரை"போலவே வந்தது simply superb.ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இதெல்லாம் ரொம்ப காலம் கடந்தவையாக தோன்றுகிறது but still.....

மேலும் சில blogல் படித்தபோது அது TRP rating காக செய்தது என்று comment டிருந்தர்கள்....ஆனால் என்னகென்னவோ அப்படி படவில்லை.
"உபயம்:so and so அவர்கள்,மாம்பழ கமிஷன் மண்டி,etc."என்று அவர்கள் வாங்கிய,வாங்காத வாங்கியதாக ஊரை ஏமாற்றும் பட்டங்களுடன் சேர்த்து போட்டிருக்கும் பாதி மறந்த நிலைக்கண்ணாடியை எல்லா கோவிலிலும்,பள்ளிவாசலிலும் பார்க்கலாம் என்ன பண்ண atleast அப்படி கொடுக்கவாவது ஆள் இருக்கேனு நினைத்து சந்தோஷபட்டுக்கவேண்டியது தான்.அது போலதான் இதுவும்.

தனக்கு option இருக்கற ஒரு மீடியால,மக்கள் மனசுல புரிய வைக்கிற அளவுக்கு கொஞ்சமாவது சொல்ல முடிஞ்சதில்லையா?கள்ளகாதலியும்,காதலனும் சேர்ந்து புருஷன கொல்றது,etc. இப்படி கொடுமை கூத்தாக நடக்கும் serialsகு மத்தியில் (கோலங்களும் இதற்கு விதி விலக்கு அல்ல) atleast தன் மனதில் இருப்பவற்றை 2 எபிசோடிலாவது எடுக்க முடிஞ்சது பாராட்ட தக்கதே.

இதனால இல்ல எதனாலையும் நம்ம தமிழ் சமூகம் திருந்த போறதில்ல...எப்பயும் போல "ஆதவன்" படம் பார்த்துட்டு "நயன்தாரா நல்ல உடம்ப கொறசிருக்கு இல்ல,மச்சான்!"அப்படினுட்டு போய்டே இருப்போம்...வாழ்க தமிழ்,வளர்க தமிழ்நாடு.
பி.கு: accidentalaஅ அந்த episode பார்க்கும் போதே தோணியது...2 or 3 daysல புது கடைய தொறந்ததால இன்னைக்கி போட்டாச்சு.

கல்யாண்ஜி கவிதைகள்

 
 

ஒரு முறை S ராமகிருஷ்ணன் நாவல்களை ஒரு மணி நேரத்தில் நூறு பக்கங்கள் வரை வாசிக்க முடிகிறதெனவும் ஆனால் கவிதைகளை அப்படி வாசிக்க முடிவதில்லை எனவும் கூறியிருந்தார்.ஏனென்றால் கவிதைகள் சொல்லவந்தவைகளை நேரடியாகவும் சொல்லாது,ரொம்ப விரிவாகவும் சொல்லாது.சூட்சுமம் மிகுந்தவை.
 
நாவல்கள் விஷயத்திலயே என் நிலைமை படு மோசம் மிக வேகமாக நாவல்களை படிக்கும் போது continous concentrationனால் மனது வேறெங்கோ தாவி விடுகிறது,உதாரணமாக டெலிபோன் டவர் முதலிய உயரமான இடங்களுக்கு  படிகளில்  ஏறுபவர்கள்  தற்காப்புக்காக  இடுப்பில் கயிறு ஒன்றை கட்டி இருப்பார்கள்,ஏனென்றால் ஒரே விஷயத்தை தொடர்ந்து,ஆழ்ந்து செய்து கொண்டே இருப்பதால் நிச்சயம் கவனம் இடரும்.என்னுடைய கவனம் பொதுவாக நாவலையொட்டிய   சம்பவங்களில்,அது தரும் அதிர்வாக எனக்குள்ளும் கற்பனை ஓடத் தொடங்கிவிடும்..சில சமயங்களில் மணிக்கணக்காக! ஆகவே வேகமாய் படிக்க முடிந்தாலும் இந்த அசை போடும் நிகழ்ச்சியால் நாவலை முடிக்க வாரக்கணக்கில் ஆகும்.
 
நாவலே இந்த லட்சணத்தில் இருக்க,கவிதைகளின் நிலைமை அதை விட மோசம் அதுவுமில்லாமல் சில கவிஞர்களின்  கவிதைகள் ரோட்டு தாரை குடிப்பதை போல அவ்வளவு கடினமாக இருக்கும்.தமிழில் இல்லாத வார்த்தைகளை  போட்டு கவிதை  என்று ஒப்பேற்றி  இருப்பார்கள்.கவிதைகள் படிக்காததற்கு இன்னொரு காரணம் நானும் "கவிதை" என்று தலைப்பிட்டு அப்படி ஒன்றை எழுத முயற்சி செய்வதாலும்,அதன் சாயல் வராமல் இருப்பதற்காகவும்!ஆனால் சிலரது கவிதைகளை படித்தவுடன் எளிமையாகவும்,அழகாவும் இருப்பதாக தோன்றும் கல்யாண்ஜியின் கவிதைகளை அந்த வகையில் ஒன்று,அவரது கவிதைகளில் எனக்கு பிடித்தவை இங்கே சில
சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே


தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்திறந்து பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே எந்தக்கடிதமும் இல்லாத ஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்
எந்தப் பறவை எழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.


நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது


இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத்தொலைக்கலாம்.
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.

அன்புடன்
நான்

ஏன் எழுத வந்தேன்?

காரணம் எதுவுமில்லை....சின்ன வயசுல இருந்து கொஞ்சம் படிக்கிற பழக்கம் இருக்கு.அத develop பண்ணி....இப்படி கொஞ்சமா blog எழுத தொடங்கி ...அப்படியே சிறுகதை,பெருங்கதை எழுதி....chance தேடி சினிமால நடிச்சு ....மேடைல பேசி....காலைவாரி விட்டு MLA ஆகி.....பின்னாடி CM ஆகனும்னு ஒரு சின்ன கனவு இருக்கு(இது சின்ன கனவாடா?).........மத்தபடி பெருசா எதுவுமில்ல......

பி.கு 1: blog தொடங்கின ஆர்வத்தில கன்னாபின்னானு எழுதறேன் போல......கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும்...பி.கு 2 :சீரியஸ் பதிவு,சிரிப்பு பதிவுனு எதுவும் இல்ல...as i told u before.தோன்றத எழுதுறேன்

பயணத்தின் முதல் படி

நான் பார்த்த இடங்கள் , படித்த புத்தகங்கள் இவைகளோடு கொஞ்சம் சேட்டை ,கொஞ்சம் காதல்,கொஞ்சம் கவிதை ! etc.ச்சும்மா just like that எழுதறேன்...மத்தபடி சமுதாயத்த திருத்தவோ(முடியுமா?),இலக்கியத்த வளர்கவோ இல்ல....
For my ref: Office,2nd shift ல எழுதுனது (வருங்கால சந்ததியினர் பார்த்து தெரிஞ்சிக்க..ஹி..ஹி)

- Copyright © துளி கடல் -