(தொடர்ச்சி) வீட்டுக்கு போனா எந்த காலேஜ் செலக்ட் பண்றதுன்னு பிரச்சனை,நான் coimbatore பக்கம் எதாவது காலேஜ் போகலாம்னு சொல்ல,
எங்க அம்மாவும்,தாத்தாவும்(மிரட்டல்!asusual) சதக் (கீழக்கரை) நல்ல காலேஜ் ,முஸ்லீம் காலேஜ் ,வாரத்துக்கு மூணு தடவை பிரியாணி போடுவாங்கனு சொல்லி (அன்னைக்கு புடிச்சது சனி)அந்த college ஐ தேர்ந்தெடுக்க வைத்தார்கள்.என் சொந்தக்காரங்க யாரோ சொன்னங்க "City சைடு படிக்க போன புள்ள கேட்டுபோயிடும்"(க்கும்).

          குடும்பத்தில் மூத்த பையன் ஆதலால் எப்பவுமே,எல்லாவற்றிருக்குமே நான் தான் "experimental rat", campus interview,lab facilities etc. எதை பற்றியும் பிரக்கை இல்லாமல்/தெரியாமல் கொஞ்சம் சந்தோஷமாக,சென்னை-பூக்கடை சரவணபவனில் புல் மீல்ஸ் சாப்பிட்டு விட்டு ஊருக்கு பஸ் ஏறினேன் (ராஜேஷ்குமார் பாணியில்:வாழ்கையில் பெரிய சூறாவளி வீசப்போகிறதேன்று தெரியாமல்....)

           பின் ஒரு நாளில் திருச்சி போய் Princi இடம் நின்ற போது எந்த பிரச்சனையும் பண்ணாமல் "NOC" தந்தார்,பின் TC வாங்கிகொண்டு 70% feeசும் வாங்கிகொண்டு,hostel மேட்ஸ் இடம் விடை பெற்று கொண்டு ஒரு வழியாக ஊருக்கு வந்து சேர்ந்தோம். (கண்டிப்பா தொடரும்...வுடமாட்டேன்)

பி.கு:TC வாங்க ஆபீஸ் கவுன்ட்டர் கிட்ட Q வில் நிற்கும் போது எனக்கு முன் சில seniors பீஸ் கட்ட நின்றுருந்தார்கள்,அவர்கள் turn வரும் போது பழக்கப்பட்ட accountant என்ன தம்பி மீசைய காணோம் என்றதும் உடனே அவன் அது பின்னாடி லாரில வருது சார் என்றான் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு ,எரிச்சலான அக்கௌன்டன்ட் இது சரியில்ல,அது சரியில்லன்னு அவன திருப்பி அனுப்பி விட்டார்.பின்னாளில் exam fees கட்டி,exam எழுதியிருப்பானோ என்னவோ தெரியவில்லை.

12 Responses so far.

 1. வீட்டுக்கு மூத்த பையனா இருந்தா.. லேப் எலி,
  கடைசி பையனா இருந்தா எல்லாருக்கும் சம்பளமில்லாத வேலைக்காரன்
  நடு பையனா இருந்தா... யாரும் கண்டுகிட மாட்டாங்க

  அப்ப நாம யாராகத்தான் இருப்பது...

  டோட்டல் கன்பூயஷன்ப்பா..

 2. உங்கள் வலைப்பூவின் முதல் பின் தொடருபவர் எனபதில் மிகப் பெருமை அடைகின்றேன்

 3. // என்றதும் உடனே அவன் அது பின்னாடி லாரில வருது சார் என்றான் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு //

  லொள்ளு ?

 4. // வாரத்துக்கு மூணு தடவை பிரியாணி போடுவாங்கனு //

  இதுதான் பாசம் என்பதா..

  பையன் காலேஜுக்கு போவது படிக்க என்பதையும் மறந்து, அவரின் வயிறு ஞாபகம் வருது பாருங்க.. அங்கதான் நிக்கறாங்க அம்மாவும், தாத்தாவும்..

 5. // (அன்னைக்கு புடிச்சது சனி) //

  சொல்வதை தெளிவாச் சொல்லணும்...

  யாருக்கு பிடிச்சது.. உங்களுக்கா.. காலேஜுக்கா?

 6. இந்த இடுகை இன்னும் தொடருமா... இல்ல இதோட முடிஞ்சு போச்சுங்களா? தொடரும் போடலை அதனாலத்தான் கேட்டேன்..

  கும்மி அடிக்க வசதியா நல்லா எழுதியிருக்கீங்க..

  அதுக்காக உங்களுக்கு ஒரு நன்றி...

 7. Ibrahim A says:

  கண்டிப்பாக தொடரும்..thanks for coming.....

 8. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி திரு. இராகவன்

 9. நம்ம ஊரா தல கலக்குங்க..அந்த ரோஜா யாருன்னு சொன்னீங்கன்னா ...

 10. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி திரு.புதிய மனிதா.....கல்யாணம் ஆகிவிட்டது....ரோஜா யாரென்று சொன்னால்,குடும்பத்தில் கொழப்பம்தான் வரும்.வம்பில மாட்டிவிடாதிங்க

 11. என்ன இந்த சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிடீங்களா....?

 12. Ibrahim A says:

  ஆஹா சின்ன வயசுன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி......இப்படி சொன்ன இரண்டாமவர் நீங்கள் தான் என் மனைவிக்கு அடுத்து.

- Copyright © துளி கடல் -