கொடியின் துணிகள்
ஒவ்வொரு வீட்டின் கொடிகளும்
அதில் காயும் துணிகளும்-காதுகொடுத்தால்
கதைகள் ஆயிரம் சொல்லும்
கேளுங்கள்.

கணவன் மனைவி வாழும் வீட்டின் கொடியில்
புடவைகளும்,சட்டைகளும் வெவ்வேறு திசை
நோக்கி பறந்தபடி இருக்கும்-ஆனால்
உள்ளாடைகளோ பிணைந்தபடி இருக்கும்.

குழந்தைகள் வாழும் வீட்டில்
பொம்மைகள் போட்ட சட்டைகளும்,மூதிரத்துணிகளும்
காற்றில் மிகுந்து ஆடும் -பின்
தரைவிழுந்து புரண்டோடத்தொடங்கிவிடும்.

வேலையற்றவன் வீட்டின் கொடிகளில்
கறைபடிந்த வேட்டியும்,பழுப்பேறிய பனியன்களும்
யாராலும் எடுக்கப்படாமல்-வேறுதுணிகளோடு
சேராமல் ஒதுங்கித்தொங்கியபடி இருக்கும்.

ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிகள்
கன்னிப்பெண் வாழும் வீட்டை சேர்ந்தவை-அவை
காய்ந்து விட்ட பின் அடுத்த மாடிக்கு
தப்பியோடிப்போய் விழுந்திருக்கும்.

விதவை வாழும் வீட்டின் கொடிகள்
எப்போதும் அறுந்துபோய் இருக்கும்-அங்கே
சாயம்போன புடவைகளும்,கவர்ச்சியற்ற உள்ளாடைகளும்
மதில் மேல் காய்ந்திருக்கும்.

கொடியில் காயும் துணிகள் இப்படிதான்-
வீட்டில் வாழ்பவர்களின்
இருப்பை மட்டுமல்ல,
நிலையையும் சொல்வதாய்
ஆகிவிடுகின்றது.


***உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது***

அன்புடன்
நான்

26 Responses so far.

 1. //விதவை வாழும் வீட்டின் கொடிகள்
  எப்போதும் அறுந்துபோய் இருக்கும்-அங்கே
  சாயம்போன புடவைகளும்,கவர்ச்சியற்ற உள்ளாடைகளும்
  மதில் மேலே காய்ந்திருக்கும்.//

  யாருங்க சொன்னா? எனக்கு கோவம் கோவமா வருது...

 2. நல்ல அருமையான கவிதை தளம் ..
  அதை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறிர்கள்..

 3. Ibrahim A says:

  வருகைக்கு மிக்க நன்றி
  சிவம்:என்ன கோவம்ங்க உங்களுக்கு?

 4. ஐயோ!அருமையான கவிதை இப்ராகிம்!

  கொடியில் ஒரு முழு வாழ்வை எழுதி செல்கிறீர்கள்!

  அற்புதம்!வெற்றி பெற வாழ்த்துக்கள்!

 5. Ibrahim A says:

  நன்றி ராஜாராம்
  வருகைக்கு மிக்க நன்றி
  Ibrahim A

 6. அன்பின் இப்ராகிம்

  கவிதை நன்றாக இருக்கிறது போட்டி விதிகளின் படி
  உரையாடல் கவிதை போட்டிக்கு என்று நீங்கள் குறிப்பிட வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்

  வெற்றி பெற வாழ்த்துகள்

 7. கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க, வாழ்த்துகள்.

 8. கவிதை பிடிச்சிருக்குங்க, வாழ்த்துகள்.

 9. Ibrahim A says:

  (நேசமித்ரன்
  யாத்ரா
  என்.விநாயகமுருகன்) ரொம்ப நன்றிங்க

 10. Kannan says:

  ரொம்ப இயல்பா எழுதுறிங்க இப்ராகிம்...வெற்றி பெற வாழ்த்துகள் ....!!!

 11. உங்க tone நல்லா இருக்கு நண்பா

  வெற்றி பெற வாழ்த்துக்கள்

  சின்னச் சின்ன பிழைகள் இருக்கு அதை களைந்துவிடுங்கள்

  நன்றி

 12. கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

 13. Vidhoosh says:

  nicely written poem.

  look for spelling mistakes.

  -vidhya

 14. Ibrahim A says:

  எல்லோருக்கும் ரொம்ப நன்றிங்க !
  Google transliteration ல எழுதரதனால கொஞ்சம் spelling mistakes வருது.
  i ll change those.Thanks again.

 15. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நண்பரே !
  வெற்றி பெற வாழ்த்துக்கள் !

 16. அண்பு நண்பரே -

  உங்கள் படைப்பு அருமை! நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
  அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

  என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/

 17. வெற்றி பெற வாழ்த்துக்கள்

 18. //கொடியில் காயும் துணிகள் இப்படிதான்-வீட்டில் வாழ்பவர்களின்

  இருப்பை மட்டுமல்ல,நிலையையும் சொல்வதாய் ஆகிவிடுகின்றது//

  அருமை இப்ராஹீம்

  வெற்றி பெற வாழ்த்துக்கள்

 19. sirumazai says:

  கவிதை நல்லாயிருக்கு இப்ராஹிம். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க!

 20. enakkul nee says:

  உங்க கவிதை ரொம்ப யதார்த்தமா இருக்கு.இன்னும் உங்க படைப்புகளை எதிர் பார்க்கிறேன்.உங்க ப்ளாக் அழகும் கூடிவிட்டது.கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 21. D.R.Ashok says:

  உங்களது ’பொறி’ நல்லாவே வந்திருக்கு, வாழ்த்துகள்

 22. நல்லா இருக்கு..! நண்பரே...!

 23. உங்கள் பொறி கொடி பறக்குதுங்க...
  வித்தியாசமான கண்ணோட்டம். பிடித்திருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

 24. வாழ்த்துக்கள்

 25. நன்றாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

 26. இயல்பான நிகழ்வு.... அழகான கவிதை... வாழ்த்துக்கள்... சிறுபொறி விளக்காகிவிட்டது...

- Copyright © துளி கடல் -