எனக்கு பிடித்த சில பாடல்களை இந்த தலைப்பின் கீழ் அலசி,ஆராயலாம் என்றிருக்கிறேன்.

"கோழி கூவுது"படத்தில் "பூவே இளைய பூவே"பாடல் எழுதியவர் வைரமுத்து,இசை(வேற யாரு) இளையராஜா.
இந்த பாடல் ஒரு பட்டணத்து வாலிபன்,தன் அழகான கிராமத்து காதலிக்கு பாடுவதாய் இருக்கும்.கேட்கும் போதே ஜில்லென்று,ஒரு ecstasyக்கு கொண்டு போய் விடும். இனி பாடல்...

"காமாட்சி இங்க இருக்கிற பூவெல்லாம் பார்க்கும் போது
எனக்கு உன் ஞாபகமாகவே இருக்கு,
இந்த லெட்டர் உனக்கு ஒரு வித்தியாசமான லேட்டராவே இருக்கும்.
பின் குறிப்பு ,தம்பி ராமகிருஷ்ணா கூச்சபடாமல் மத்த வரிகளையும் படித்து காட்டவும்"

"பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமேஏஏஏஏ.
மடிமீது தேங்கும் தேனேஏஏஏ.....
எனக்குதானே,எனக்குதானேஏஏஏஏ......."

முதல் இரண்டு வரிகளை லேசான voiceஇலும்,அடுத்த இரண்டு வரிகளும் high pitch இலும் வருவதும் அதற்கு மிக அருமையான பின்னணியும் இந்த பாடலின் தரத்தை சொல்லும்.இது ஒரு romantic song ஆனாலும் மலேசியா வாசுதேவனுக்குரிய கரடு,முரடுத்தனம் தெரியும்.அதுவே எனக்கு இந்த பாடலில் இளையராஜாவை விட M.Vயே அதிகம் பளிச்சிடுவதற்கு காரணம்.

"குழல் வளர்ந்து அலையானதே...இரவுகளின் இழயானதே"(இருமுறை)
"விழி இரண்டும் கடலானதே,எனது மனம் படகானதே.....
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே,நிலவு அதில் முகம் பார்த்ததேஎஎஎஎ"

இருமுறை வரும் முதல் வரி high pitch இல்,கத்திப்பாடுவது போல வரும்,
அடுத்த இரண்டு வரிகளும் ஸ்ருதி இறங்கி,காதலியிடம் சரணடைந்து விட்டாற்போல்,அவள் அழகில் மனம் லேசாகி,இளைப்பாறி பாடுவது போல தோன்றும்.Beautiful.

"இனிக்கும் தேனேஎஎஎஎ.......எனக்குத்தானேஎஎஎஎ........."
"இளஞ்சிரிப்பு ருசியானது...அதுகனிந்து இசையானது...(இருமுறை&high pitch)
குயில் மகளின் குரலானது,இருதயத்தில் மழை தூவுது.......
இரு புருவம் இரவானது....இருந்தும் என்ன வெயில் காயுதேஎஎஎஎஎஎஎ"

முதல் வரி highpitch இல் வரும்,அடுத்த வரி பள்ளத்தில் விழுந்து நம்மை தாலாட்டி தூக்கிப்போகும்.அதுவும் அந்த "காயுதேஎஎஎஎஎஎஎ" வில் ஒரு நீண்ட இழுவை வரும்...யப்பா chanceஎ இல்ல.இந்த பாடல் எனக்கு மிகபிடித்ததற்கே அந்த வரி தான் காரணம்.அந்த வரிகளின்  போது பாடலின் மீது அதிக concentrate பண்ண ஆரம்பித்துவிடுவேன்.

The very best song of Ilayaraaja+Malaysia vasudevan i think.
பி.கு:வைரமுத்து, பிரபுவுக்கு எழுதியதில் தனக்கு பிடித்த பாடல் என எங்கோ படித்தாய் நினைவு.

5 Responses so far.

 1. சூப்பர் பாட்டுங்க...
  நல்லா நினைவு படுத்தினீங்க,...
  ஆரம்பத்தில் வரும் குரல் எஸ்.என்.சுரேந்தர் ஆக இருக்குமென நினைக்கிறேன்...
  பாடல் எழுதியது வைரமுத்துவா இல்லை கங்கை அமரனா?...

 2. Ibrahim A says:

  வைரமுத்து...
  அதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் ......வருகைக்கு நன்றி தமிழ்பறவை

 3. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...

 4. kamalesh says:

  நீங்கள் ஆராய்ச்சிக்காக எடுத்த பாட்டிற்காகவே முதலில் ஒரு சபாஷ் இல்லை நூறு சபாஸ் கொடுக்க வேண்டும்.....சபாஷ், சபாஷ்..சபாஷ்..சபாஷ்.....

  "குழல் வளர்ந்து அலையானதே...இரவுகளின் இழயானதே....

  இரு புருவம் இரவானது....இருந்தும் என்ன வெயில் காயுதேஎஎஎஎஎஎஎ....

  வரிகளை எவ்வளவு ஆழமாக கவனிதிருக்ரீர்கள் என்பதற்கும், உங்களின் ரசனைக்கும்...எத்தனை முறை பாராட்டினாலும் தகும்...

  நீங்கள் ரசித்த வரிகள் வைரமுத்தின் கவிதைகளை அவரே பாடலாக எழுதியது..

  கவிதை :
  கூந்தல் இரவின் இளை
  புருவம் மை இருட்டாய் கருத்திருக்கிறது..
  ஒளிவீசும் பார்வையோ வெயிலை ஒத்திருக்கிறது..
  அட என்ன இது !!!
  இரவின் அடிவாரத்தில் வெயில் காய்கிறது...
  - வைரமுத்து -

  பி.கு:வைரமுத்து, பிரபுவுக்கு எழுதியதில் தனக்கு பிடித்த பாடல் என எங்கோ படித்தாய் நினைவு.

  வருடம் 2001 - ல் அனந்த விகடனில் வைரமுத்தின் இதே பாடலையும், இதே கவிதையையும் குறிப்பிட்டு அவர் கவிதைகளுக்கும், திரை பட பாடல்களுக்கும் இடையில் இருந்த இடைவெளியை குறைத்திருப்பதை பாராட்டி இரு பக்கங்களுக்கு எழுதி இருந்தார்கள்...


  மிகவும் அழகான பதிவு உங்களுடையது...
  தொடர்ந்து உங்களின் எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...

 5. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி திரு. kamalesh

- Copyright © துளி கடல் -