முதற்காதலி

"ஹாய் பொண்டாட்டி"என்று வாசலில் நுழையும் போது
"என்னடா புருஷா"என்பாய் சிணுங்கலுடன்-பின் முந்தனையால்
வேர்வையோடு சேர்த்து என் களைப்பையும் துடைத்தெடுப்பாய்.

"சரியாவே சாப்பிட மாட்டேன்கறீங்க" என்று லேசாய் கடிந்து கொள்வாய்.
"இதை பார்த்துமா சொல்ற?" என்று என் வழிந்தோடும் தொப்பையை காட்டிச்சிரிப்பேன்.
கூட்டு,பொறியல் இவைகளோடு நிறைய காதலும் சேர்த்து பரிமாறுவாய்.

"போதும் விடு"என்றபடி விலகிச்சாய்வேன் நான்.
நீயோ,நானோ;முத்தமிட யார் முதலில் தொடங்கினாலும்
இதுவரை முதலில் விலகியதில்லை நீ.

"பரவால்லைங்க,புது புடவை இல்லைனா என்ன"என்பாய் சிரித்தபடி.
திருமணநாளிற்கோ,உன் பிறந்தநாளிற்கோ-பரிசாக,
வெறும் இலவச முத்தங்கள் மட்டுமே கொடுக்க முடிந்தது என்னால்.

"நான் எப்படி இருக்கேங்க?"என்று என்முன்னே வந்து நிற்பாய்.
நூல் புடவையிலும்,ஒற்றை செயினிலும்,துண்டு மல்லிகை பூ முழத்திலுமே
உன்னை அழகாய் அலங்கரிக்க கற்றுகொண்டாய் நீ.

இன்னும் பல நேரங்களில்..
தாயாய்,தோழியாய்.......தேவதையாய் நீ.

ஆனால்
எப்போதாவது காற்றில் அத்துமீறி பறந்து
என் முழங்கை மீது லேசாய் உரசும்
அவள் புடவை தீண்டலின் சந்தோஷத்தை-ஒருபோதும்
தர முடிந்ததில்லை உன்னால்.

 
அன்புடன் 
நான்                                                                    

10 Responses so far.

 1. ரோஜாவின் காதலனே கவிதை உரசல் சூப்பர்.

 2. வாசித்தோம் மகிழ்ச்சி

 3. நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்..

 4. கவிதை சூப்பர்

 5. ஆரம்பத்திலிருந்து கவிதை நல்லாயிருக்கு... ஆனா கடைசியில் அந்த “அவள்’ உறுத்தலா இருக்கே... அல்லது நான் புரிந்துக்கொண்டது தவறா???

 6. Ibrahim A says:

  திரு சி. கருணாகரசு
  என்னதான் மனைவி நம்மீது காதல் கொண்டாலும்....
  நம் பழைய காதலியின் நினைவுகளோ அவளின் சிறு ஸ்பரிசமோ நம்மை விட்டு அகலாது.....

  அதுதான் அந்த “அவள்’ .........

  பின் குறிப்பு :இதில் "நம்" என்பதில் "நான்" சேர்த்தி இல்லை (என் மனைவி படிக்ககூடும் என்பதால்)

 7. கலக்கிட்டீங்க போங்க , வீட்டுக்காரம்மா பார்த்தா திருவிழா தான் ...

 8. Anonymous says:

  eppadi ipdlam ezhutha mudiyuthu...athuvum romba yetharthama...superb...

 9. Anonymous says:

  kavithai arputham...

 10. Bogy.in says:

  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

- Copyright © துளி கடல் -