முன்குறிப்பு:தூங்கறது,சாப்பிடறது கூட ஒரு daily process ஆகி போன இப்ப கூட எப்போதாவது ஆபீஸ் காரிடரில் நடக்கும் போது என்னையுமறியாமல் front-foot போட்டு காற்றில் கையால் ஒரு கவர்-டிரைவ் ஆடிவிட்டு ,அப்படியே "டொக்"குன்னு வாயால் ஒரு சவுண்ட் விட்டு அந்த virtual பால பௌன்றிக்கு அனுப்பி ஒரு புன்முறுவலோட நடப்பேன் ஏதோ ஒரு பழைய ஞாபகத்தால......

            முதன் முதலா 3rd/4th ஸ்டாண்டர்ட் படிக்கும் போது தான் கிரிக்கெட் ஆடினேன் (ஆரம்பிச்சுட்டான்யா)......கணேஷ் என் கூட ஸ்கூல் படிச்சவனும் அவன் அண்ணன் அஷோக்கும் தினமும் எங்க வீடு எதிர்ல இருக்கற கிரௌண்டுக்கு விளையாட வருவார்கள்.என்னடா பண்றாங்கன்னு ஒரு நாள் நானும் போய் நின்னேன்...பார்த்தா அவ்ளோ பெரிய கிரௌன்ட்ல இவனுங்க ரெண்டு பேர் மட்டும் தனியா(ரெண்டு பேர்னா அதெப்படி தனியாகும்) விளையாடிகிட்டு இருக்க நான் வரேன்னு போய் நின்னேன்..... ...அசோக் என்ன மேல,கீழ பார்த்தான் என்ன நினைச்சானோ தெரியல என்னையும் சேர்த்துக்கொண்டான்(சிக்கிடாண்டா நமக்கு ஒரு அடிமை)போய் லாங்-ஆன்ல நில்லுன்னான் ,எனக்கு புரியாமல் அம்பயர் நிக்கற இடத்தில் போய் நிற்க..என்னை கேவலமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு அவனே கொண்டு போய் நிற்க வைத்தான்.

       அவன் பேட்டிங் பண்ணும் போது என்ன டீப்ல நிக்க சொல்லுவான்,அவன் தம்பி பண்ணும் போது நான் கீப்பர் நிக்கணும் (ஏன்னா அண்ணன் போன்ற பௌலிங் ஆட முடியாம தம்பி நிறைய கப்பயில விட்டுடுவாராம்).

அசோக் பேட்டிங் பண்ணும் போது அவன் தம்பி போன்ற ஷார்ட்-பால்,புல் டாஸ் பாலெல்லாம் கன்னா பின்னானு ,என்னமோ 2 ஸ்லிப்,மிட்-ஆன்,மிட்-ஆப்,லாங்-ஆன்,கல்லி,சில்லி ல ஆள் இருக்கற மாதிரி அடிப்பான்......நானே எல்லா இடத்துக்கும் ஓடி விழுந்து,புரண்டு தவ்வற தவளைய புடிக்கற மாதிரி பந்தை புடிச்சு எறிவேன்.(ஆர்வக்கோளாறு).அவனுக்கு எப்ப போர் அடிக்குதோ அல்லது கை வலிக்குதோ அப்போ அவன் தம்பிகிட்டயோ என்கிட்டையோ அவன் பேட் குடுப்பான்...

ஒரு நாள் அப்படி தான் என் கிட்ட பேட் கிடைச்சது அதை கிட்டிபுல் புடிக்கிற மாதிரி,ஒரு மாதிரி புடிச்சேன் (இப்ப டோனி அப்படி தானே புடிக்கிறார்) அன்னைக்கு கணேஷ் போட்ட பந்து ஒன்னு கூட பேட்ல படல(அவன் பந்து போட்டா அது தம்பரதில இருந்து ஆவடிக்கு போகும்...நாம பஸ் ஏறி போய் தான் அடிக்கணும்) நானும் முக்கி முக்கி பார்த்தேன் ம்ஹும்.......பின் நான் பேட்டில் பந்து படாமலேயே ஓட ஆரம்பித்தேன்(ஆதாவது கை,காலால் எத்திவிட்டு ஓட தொடங்கினேன்) அதை பார்த்தா அஷோக் என்னிடம் வந்து அதை குடுத்துட்டு ஓரமாய் போய் நில்லுன்னு பேட்டை புடுங்கி அவன் தம்பி கிட்ட குடுத்துட்டான்(பொறாமை?!)நமக்கு வீரதீரமான பீல்டிங் தான் சரின்னு போய் நின்னு விழுந்து விழுப்புண்களை பெற தொடங்கினேன்.இப்படி ரொம்ப நேரம் விளையாடி ஒரு கட்டத்தில் இருட்டி போன பின் பௌலிங் ஆக்க்ஷன் பண்றதுக்கு முன்னாடியே பேட்டிங் பண்றவன் ஒரு சுத்து சுத்தி அதன் பின் பந்து செவுளில் விழுந்ததும் விளையாட்டை நிறுத்தினோம்.

இருட்டுல கொஞ்ச நேரம் அங்கேயே உக்கார்ந்து (post match discussion!) இன்டர்நேஷனல் கிரிக்கெட் பற்றியும்,பிளேயர்கள் பற்றியும் அஷோக் நிறைய சொல்லுவான்.
அவை சில:
1.சிக்ஸர் போன பந்தை பௌன்றி லைன் பீல்டர் ஓடி போய் பிடித்து பேலன்ஸ் இல்லாமல் கூட்டத்தில் போய் விழுந்ததாகவும் அதற்க்கு அம்பயர் அவுட் கொடுத்ததாகவும் சொல்லுவான்(அது தான் ரூல்ஸாம்!)

2.கவாஸ்கர் ஸ்லோவாக விளையாடி கொண்டிருக்கும் போது ட்ரிங்க்ஸ்-ப்ரேக்கில் கபில் தேவிடமிருந்து "சீக்கிரம் அவுட் ஆகிவிட்டு வா,நான் வந்து அடித்து ஆடுகிறேன்"னு சீட்டெழுதி வந்தது என்பான்.

3.தப்பாக அவுட் கொடுத்த அம்பயரை சித்து ஸ்டம்ப்ஐ புடுங்கி நடு கிரௌண்டிலயே சொருவிப்போட்டு ஜெயிலுக்கு போனான் என்பான் (அண்ட புளுகுடா சாமீ!! !)   

இதுபோன்ற செய்திகளை கேட்டு என் கிரிக்கெட் அறிவை வளர்க்க ஆரம்பித்தேன்

(இன்னும் வரும்......லேசுல வுடமாட்டேன்)
                                                                           *!!!*

3 Responses so far.

  1. //3.தப்பாக அவுட் கொடுத்த அம்பயரை சித்து ஸ்டம்ப்ஐ புடுங்கி நடு கிரௌண்டிலயே சொருவிப்போட்டு ஜெயிலுக்கு போனான் என்பான் (அண்ட புளுகுடா சாமீ!! !)
    //

    அப்போம் இது உண்மை இல்லியா பாஸ் !!!

  2. Ibrahim A says:

    கண்டிப்பா இல்லீங்க......உங்களையும் யாரோ தப்பா யூஸ் பண்ணி இருக்காங்க.....

- Copyright © துளி கடல் -