நாளொரு கிரௌண்டும் பொழுதொரு பிட்ச்சும்------1 படிக்க இங்கே க்ளிக்கவும்

........வீட்டிலும் அவ்வப்போது கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன்.அஷோக் என் கிரிக்கெட் குரு ஆனான்(வேற வழி) பால் வாங்க காசு போட்டு,அவனுடைய சொறி பேட்டுக்கு பெவிகால் தடவி twine நூல் சுத்தி,அவன் கிரௌன்ட்ல எட்டு மூலைக்கும் அடிக்கிற பந்தை சளைக்காமல் எடுத்துட்டு வந்து பௌலிங் போட்டு (சிரிக்ககூடாது,இது பிராக்டீஸ்....அதாவது அவன் எப்பவும் பேட்டிங் பிராக்டீஸ் மட்டுமே பண்ணுவான்,நான் எப்பவும் பௌலிங் & பீல்டிங் பிராக்டீஸ் பண்ணுவேன்)

         இதனால் என்னை அவனுக்கு பிடித்துபோய் எங்க ஏரியா மேட்ச் எங்கு நடந்தாலும் என்னை அழைத்துபோவான்(வேடிக்கை பார்க்கத்தான்!).ஆனா அங்க போனதும் தான் தெரிஞ்சது அவனையே நிறைய மேட்சில் வெளியில உக்கார வச்சிடுவாங்கன்னு....அப்படியே சேர்த்துகொண்டாலும் அவன் 10th டௌன் ஆகதான் இறங்குவான் என்று...அப்படியே இறங்கினாலும் அவன் 5 ரனுக்கு மேல் அடித்ததில்லை என்று.இன்னும் சில நாட்களில் என்னுடைய கிரிக்கெட் குரு ஓவர்களுக்கிடையில் தண்ணி எடுத்துக்கொண்டு பேட்ஸ் மேன் கிட்ட ஓடுவார்,பேட்ஸ் மேன் பேட் மாத்தனும்னா (தக்கையான பேட் எடுத்துட்டு வாடா,அதுலதான் ஸ்பின் ஆட முடியும்)  ரெண்டு,மூணு பேட் தூக்கிட்டு ஓடுவார்,பந்து தொலைஞ்சோ,கிழிஞ்சோ போச்சுன்னா காச வாங்கிட்டு போய் பந்த வாங்கிட்டு வருவார்,மேட்ச் முடிஞ்சப்புறம் ஸ்டம்ப்,பேட்,பால் எல்லாத்தையும் தூக்கிட்டு போவார். இன்னிங்க்ஸ் இடைவெளியில சின்ன பசங்கள பௌலிங் போட சொல்லி "square cut,leg glance" (சத்தமாக அட்வைஸ் பண்ணிக்கொண்டே) ஆடி அடுத்த மேட்ச்ல் இடம் புடிக்க முயற்சி பண்ணுவார்.
  சில நாட்கள்ல கிரிக்கெட் பார்க்கவும்,விளையாடவும் ரொம்ப தீவிரமா ஆனேன்...எங்க ஏரியா டீமுக்குள்ள விளையாடும் போது நானும் சேர்ந்து விளையாட தொடங்கினேன்....பாட்டிங்,பௌலிங் கிடைக்கவில்லை என்றாலும் பீல்டிங் செய்வேன்.(பின்ன 12th மேனுக்கு எப்படி பாட்டிங்,பௌலிங் கிடைக்கும்).

 என் மாமா பசங்க(தப்பா புரிஞ்சிக்க கூடாது...என் மாமாவின் பிள்ளைகள் னு அர்த்தம்),என் தங்கச்சி!(இன்னைக்கும் அவ தீவிரமான கிரிக்கெட் Fan,இன்ஜினியரிங் collage ல படிக்கும் போது வுமன்ஸ் கிரிக்கெட்ல கோல்ட் மெடலிஸ்ட் ) இவங்களோட விளையாடி பெரிய பிளேயர்அ (எங்க வீட்ல மட்டும்) உருவானேன்.

 இப்படி நல்ல போயிட்டிருக்கும் போது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நிகழ்ந்தது.....
எங்க ஏரியாவுக்கும் பக்கத்து ஏரியாவுக்கும் நடந்த ஒரு மாட்சில் எப்படியோ என்னை சேர்த்துகிட்டாங்க...கன்னா பின்னானு சுத்தினதில என் பாட்ல அதுவா பட்டு(சத்தியமா நான் இல்லீங்) பௌலர் தலைக்கு மேல 4 போச்சு(என் கிரிக்கெட் வாழ்க்கையோட முதல் 4 அது)...சொன்னா நம்ப முடியாது,அந்த மாட்சில டீம் முழுக்க அவுட் ஆகியும் நான் மட்டும் அவுட் ஆகல(ஏன்ன எறங்கினதே கடைசியிலதானே..ஹி..ஹி..ஹி)

இது மாதிரி(ரொம்ப கேவலமா) நிறைய மட்சுல விளையாடி எங்க ஏரியா சின்ன டீம்ல(15 வயசுக்கு உட்பட்டவர்கள் மட்டும்) 12th மேன்,13th மேன் ஆக இடம் பெற்றேன்.

இப்படி நாளொரு கிரௌண்டும்,பொழுதொரு பிட்சுமாக என் கிரிக்கெட் பயணம் தொடர்ந்தது........(இன்னும் வரும்......லேசுல வுடமாட்டேன்)

3 Responses so far.

  1. சரளமான எழுத்து நடையில் சுவாரஸ்யமாகவும் எழுத முடிகிறது உங்களால்.வளர்க!

  2. Ibrahim A says:

    வருகைக்கு நன்றி...சந்திரமோகன்

  3. karges says:

    அப்புறம் பதிவின் தொடர்ச்சிய காணுமே..?

- Copyright © துளி கடல் -