Archive for April 2010

பெங்களுர் அப்டேட்ஸ் அல்லது சூடு தாங்க முடியல!


கடந்த சில வருடங்களை விட இந்த வருடம் பெங்களூரில் வெயில் அதிகமாயிருக்கிறது.....மிகவும் அதிகமாயிருக்கிறது.(Green house effect?...global warming?அப்போ 2012 உலகம் அழிய போகுதா?ஜாலி தான்...அன்னைக்கு ஆபீஸ் போக தேவையில்லையே!) முன்பெல்லாம் சம்மர்ல பகல் முழுதும் வெயிலடித்தாலும் மாலையிலும்,இரவிலும் சில்லென்று ஆகிவிடும்.ஆனால் இந்த வருடம் அப்படி இல்லை சட்டை நனைந்து மண்டை காயுமளவிற்கு வெயில் துரத்துகிறது.பெங்களூரில் வெயில் காரணமாய் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்திருப்பதை இப்போதுதான் பார்கிறேன்.
                                                                     ** _______**     
பெங்களூருக்கு யார் வந்தாலும்,வந்து போனாலும் இந்த போக்குவரத்து நெரிசலையும்,தொல்லையையும் பற்றி நிச்சயம் பேசுவார்கள் (எப்படி நம் சென்னைக்கு வந்து போனவர்கள் அங்குள்ள ஆட்டோகாரர்களை பற்றி பெருமை(!) பேசுவார்களோ அப்படி) அதற்க்கு என்ன காரணம்னா இது ரொம்பவும் லேட் ஆகவும்,பாஸ்ட் ஆகவும் வளர்ந்த சிட்டி அதனால அரசாங்கதால இந்த ஜன பெருக்கத்தையும் அதனால் ஏற்பட்ட வாகன நெரிசலையும் ஈடு கொடுக்க முடியாமல் நிறைய இடங்களில் போக்குவரத்தில் குளறுபடி பண்ணி வைத்திருப்பார்கள்.

       திடீர் திடீரென்று ஒன் வே-டூ வே மாற்றம் நடக்கும்...அது தெரியாமல் நேற்று போன டூ-வே ல போனா ஒன்-வே னு டிராபிக் போலீஸ் சட்டைய புடிக்கும்...ரோடு பிளாக்,take diversion,எல்லாம் அடிக்கடி நடக்கும் ...அதுவும் இப்போ "மெட்ரோ ரயில்" வேலை நடை பெற்றுக்கொண்டிருப்பதால் MG .ரோடு,மல்லேஷ்வரம்,இந்திரா நகர்,ஓல்ட் மெட்ராஸ் ரோடு ஆகியவைகளில் நிறைய மாற்று வழி ஏற்படுத்தி வைத்து நம்மை சுத்த விடுவார்கள்.

இப்படி குறைகள் இருந்தாலும்,பல நிறைகளும் உள்ளது....

எந்த ரோடு போடும் வேலையும் ரொம்பவும் இழுத்தடிக்காமல் முடித்து விடுவார்கள்.
மக்கள் அடிக்கடி உபயோகிக்கும் மோசமான ரோடுகளை தார் போட்டு உடனே நல்ல ரோடாக மாற்றி விடுவார்கள்...அது போல செய்வதை திருந்தவும் செய்து வைத்திருப்பார்கள்.(இதை நான் பட இடங்களில் கண்டுள்ளேன்).
       நிறைய இடங்களில் ரோடுகளை அகல படுத்தி வைத்திருப்பார்கள்....அதுவும் அந்த ஏர்போர்ட் ரோடு...சிட்டிகுள் கிட்டதட்ட 20கிமீ மேல்  ....புறநகர் வரை ஒரு சிக்னல் கூட ஏற்படுத்தாமல் அண்டர் பாஸ்,U-turn அது இதுன்னு வச்சு கலகியிருப்பங்க.....அதன் பராமரிப்பும் நன்றாக இருக்கும்.
        அது போல 10கிமீ நீளும் பொம்மனஹள்ளி-எலக்ட்ரானிக் சிட்டி fly-over,முன்பெல்லாம் சில்க் போர்டு ஜங்சன்ல இருந்து EC இக்கு பல சிக்னல்களில் விழுந்து எழுந்து போக 45-50 நிமிஷங்கள் ஆகும்...அனால் இப்போது இந்த fly-overஇல்   8-10 நிமிஷங்களில் சென்று விடலாம்.....fly-overக்கு கீழேயும் சாலை பெரிது படுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் இல்லை..ஆனால் நிறைய சிக்னல் உள்ளது...நம்ப ஊர் கத்திபாரா பலி-over போலில்லாமல் இதன் கட்டுமான பணியும் வேகமாகவே முடிந்துவிட்டது.

பின்குறிப்பு 1(எப்பவும் எழுதி பழக்கமாயிடுச்சு):
பெங்களூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் கட்டிகொண்டிருக்கும் பொது அதற்க்கு தலைவராக எந்த அரசியல் சாயமும் இல்லாத இன்போசிஸ் நாராயணமூர்த்தி இருந்திருக்கிறார்(2005வரை).நம்ப ஊரில் இதெல்லாம் நடக்குமா?குடியரசு தலைவராயிருந்த Dr.அப்துல் கலாமுக்கு நாம் கொடுக்க முடிந்தது அண்ணா பல்கலைகழகத்தின் வாத்தியார்! பதவி.

பின்குறிப்பு 2 :சூடு தாங்க முடியல னு தலைப்பு போட்டு இந்த பதிவை நேற்று எழுதி வைத்து விட்டு ஆபீசில் இருந்து கிளம்பினால் செம மழை(additional ஆக இடி மின்னல் வேறு),பைக் வேறு எடுத்து வந்துவிட்டேன்...என்ன செய்ய.....சொட்ட சொட்ட நனைந்து கொண்டே,கரைந்து கொண்டே வீடு சென்றேன்.வீட்டிற்கு போனபோது நான் நனைந்து வருவேனோ,கரைந்து வருவேனோ என்று கால் கடுக்க உப்பரிகையில்!(பால்கனி) காத்துக்கொண்டிருந்தாள் கவலை தங்கிய முகத்தோடு.அந்த அன்பிற்காகவே இன்னும் எதனை முறை வேண்டுமானாலும் நனைந்து வரலாம் போலயே!!!

- Copyright © துளி கடல் -