கடந்த சில வருடங்களை விட இந்த வருடம் பெங்களூரில் வெயில் அதிகமாயிருக்கிறது.....மிகவும் அதிகமாயிருக்கிறது.(Green house effect?...global warming?அப்போ 2012 உலகம் அழிய போகுதா?ஜாலி தான்...அன்னைக்கு ஆபீஸ் போக தேவையில்லையே!) முன்பெல்லாம் சம்மர்ல பகல் முழுதும் வெயிலடித்தாலும் மாலையிலும்,இரவிலும் சில்லென்று ஆகிவிடும்.ஆனால் இந்த வருடம் அப்படி இல்லை சட்டை நனைந்து மண்டை காயுமளவிற்கு வெயில் துரத்துகிறது.பெங்களூரில் வெயில் காரணமாய் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்திருப்பதை இப்போதுதான் பார்கிறேன்.
                                                                     ** _______**     
பெங்களூருக்கு யார் வந்தாலும்,வந்து போனாலும் இந்த போக்குவரத்து நெரிசலையும்,தொல்லையையும் பற்றி நிச்சயம் பேசுவார்கள் (எப்படி நம் சென்னைக்கு வந்து போனவர்கள் அங்குள்ள ஆட்டோகாரர்களை பற்றி பெருமை(!) பேசுவார்களோ அப்படி) அதற்க்கு என்ன காரணம்னா இது ரொம்பவும் லேட் ஆகவும்,பாஸ்ட் ஆகவும் வளர்ந்த சிட்டி அதனால அரசாங்கதால இந்த ஜன பெருக்கத்தையும் அதனால் ஏற்பட்ட வாகன நெரிசலையும் ஈடு கொடுக்க முடியாமல் நிறைய இடங்களில் போக்குவரத்தில் குளறுபடி பண்ணி வைத்திருப்பார்கள்.

       திடீர் திடீரென்று ஒன் வே-டூ வே மாற்றம் நடக்கும்...அது தெரியாமல் நேற்று போன டூ-வே ல போனா ஒன்-வே னு டிராபிக் போலீஸ் சட்டைய புடிக்கும்...ரோடு பிளாக்,take diversion,எல்லாம் அடிக்கடி நடக்கும் ...அதுவும் இப்போ "மெட்ரோ ரயில்" வேலை நடை பெற்றுக்கொண்டிருப்பதால் MG .ரோடு,மல்லேஷ்வரம்,இந்திரா நகர்,ஓல்ட் மெட்ராஸ் ரோடு ஆகியவைகளில் நிறைய மாற்று வழி ஏற்படுத்தி வைத்து நம்மை சுத்த விடுவார்கள்.

இப்படி குறைகள் இருந்தாலும்,பல நிறைகளும் உள்ளது....

எந்த ரோடு போடும் வேலையும் ரொம்பவும் இழுத்தடிக்காமல் முடித்து விடுவார்கள்.
மக்கள் அடிக்கடி உபயோகிக்கும் மோசமான ரோடுகளை தார் போட்டு உடனே நல்ல ரோடாக மாற்றி விடுவார்கள்...அது போல செய்வதை திருந்தவும் செய்து வைத்திருப்பார்கள்.(இதை நான் பட இடங்களில் கண்டுள்ளேன்).
       நிறைய இடங்களில் ரோடுகளை அகல படுத்தி வைத்திருப்பார்கள்....அதுவும் அந்த ஏர்போர்ட் ரோடு...சிட்டிகுள் கிட்டதட்ட 20கிமீ மேல்  ....புறநகர் வரை ஒரு சிக்னல் கூட ஏற்படுத்தாமல் அண்டர் பாஸ்,U-turn அது இதுன்னு வச்சு கலகியிருப்பங்க.....அதன் பராமரிப்பும் நன்றாக இருக்கும்.
        அது போல 10கிமீ நீளும் பொம்மனஹள்ளி-எலக்ட்ரானிக் சிட்டி fly-over,முன்பெல்லாம் சில்க் போர்டு ஜங்சன்ல இருந்து EC இக்கு பல சிக்னல்களில் விழுந்து எழுந்து போக 45-50 நிமிஷங்கள் ஆகும்...அனால் இப்போது இந்த fly-overஇல்   8-10 நிமிஷங்களில் சென்று விடலாம்.....fly-overக்கு கீழேயும் சாலை பெரிது படுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் இல்லை..ஆனால் நிறைய சிக்னல் உள்ளது...நம்ப ஊர் கத்திபாரா பலி-over போலில்லாமல் இதன் கட்டுமான பணியும் வேகமாகவே முடிந்துவிட்டது.

பின்குறிப்பு 1(எப்பவும் எழுதி பழக்கமாயிடுச்சு):
பெங்களூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் கட்டிகொண்டிருக்கும் பொது அதற்க்கு தலைவராக எந்த அரசியல் சாயமும் இல்லாத இன்போசிஸ் நாராயணமூர்த்தி இருந்திருக்கிறார்(2005வரை).நம்ப ஊரில் இதெல்லாம் நடக்குமா?குடியரசு தலைவராயிருந்த Dr.அப்துல் கலாமுக்கு நாம் கொடுக்க முடிந்தது அண்ணா பல்கலைகழகத்தின் வாத்தியார்! பதவி.

பின்குறிப்பு 2 :சூடு தாங்க முடியல னு தலைப்பு போட்டு இந்த பதிவை நேற்று எழுதி வைத்து விட்டு ஆபீசில் இருந்து கிளம்பினால் செம மழை(additional ஆக இடி மின்னல் வேறு),பைக் வேறு எடுத்து வந்துவிட்டேன்...என்ன செய்ய.....சொட்ட சொட்ட நனைந்து கொண்டே,கரைந்து கொண்டே வீடு சென்றேன்.வீட்டிற்கு போனபோது நான் நனைந்து வருவேனோ,கரைந்து வருவேனோ என்று கால் கடுக்க உப்பரிகையில்!(பால்கனி) காத்துக்கொண்டிருந்தாள் கவலை தங்கிய முகத்தோடு.அந்த அன்பிற்காகவே இன்னும் எதனை முறை வேண்டுமானாலும் நனைந்து வரலாம் போலயே!!!

11 Responses so far.

 1. உண்மைதான். என்னதான் சிங்காரச்சென்னை என்று கங்கணம் கட்டி வேலை செய்தாலும், பெங்களூரைப்போல பராமரிக்க முடியாது. பிற மாநிலத்தவராய் இருந்தாலும் கண்டிப்பாய் இதை பாராட்டியே ஆக வேண்டும்.


  // அன்பிற்காகவே இன்னும் எதனை முறை வேண்டுமானாலும் நனைந்து வரலாம் போலயே //

  மழையிலும், அன்பிலும் சேர்ந்து நனைஞ்சிட்டேன்னு சொல்லுங்க.

  வாழ்த்துக்கள்.

 2. பெங்களூருவில் ரோடுகள் குளறுபடிதான் ஆனால் மேம்பாட்டு முயற்சிகள் நடைபெற்று வருவதைப் பாராட்ட வேண்டும்.

  சமீபத்து ட்ராபிக் துயரங்கள்:

  1. சேஷாத்ரிபுரத்தில் (மல்லேஸ்வரம்) புதிதாகக் துவங்கப்பட்டுள்ள (இந்தியாவிலேயே பெரிய) மந்திரி ஸ்கொயர் ஷாப்பிங் மால். இதனால் ​ரேஸ் கோர்ஸிலிருந்து மல்லேஸ்வரம் ஸர்க்கிள் வரைக்கும் ட்ராபிக் அள்ளுது.

  2. கிருஷ்ணராஜபுரம் ப்ளை ஓவர். அங்கு ரயில் நிலையமும் இருப்பதால் ​வெளிவரும் கூட்டத்தை அள்ள பஸ்களும் ஆட்டோக்களும் ட்ராபிக் நெரிசலை - காலை 5 மணியிலிருந்தே) ஏற்படுத்துகிறார்கள்.

  3. எலக்ட்ரானிக் சிட்டி ப்ளை-ஓவரில் உள்ள டோல் கேட்டுகள் அதிக ​நேரம் பிடித்துக் கொள்ளவதாக அறிகிறேன். ப்ளை-அண்டர் ரோடே தேவலை என்று கம்யூட்டர்கள் ​சொல்வதாக படித்தேன்.

  அப்படியா?

 3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

 4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

 5. thalaivan says:

  வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  Hello

  you can register in our website http://www.thalaivan.com and post your articles

  install our voting button and get more visitors

  Visit our website for more information http://www.thalaivan.com

 6. பின்னூட்ட‌ம் போட‌ எங்க‌ கிளிக்க‌னும் வ‌ழி சொன்னீங்க‌னா ப‌ர‌வாயில்லை! டெம்பிளேட் க‌ல‌ருட‌ன் இணைந்துவிட்ட‌து.
  முத‌ல் ப‌ட‌த்தில் எதுக்கு அவ்வ‌ள‌வு ப‌க்க‌த்தில் ப‌க்க‌த்தில் தூண்? ஏதோ இடிக்குது

 7. Ibrahim A says:

  ஜெகநாதன் வருகைக்கு நன்றி ....டோல் கேட் securities பண்ற பிரச்சனை தான் அது..அவங்களுக்கு அந்த system சரியாய் புடி படலன்னு நினைக்கிறன்....விரைவில் சரி ஆகிவிடும் என எதிர் பார்போம்
  வேல்முருகன் வருகைக்கு நன்றி
  வடுவூர் குமார் தலைப்பின் கீழே "comments" ஐ கிளிக் பண்ணுங்கள்.அவ்வளவு தூண்கள் ,பாலம் உயரமாகவும்,நீளமாகவும் இருப்பதால் additional support காக இருக்கலாம் ....
  வேறு எதுவும் என்னால் யோசிக்க முடியவில்லை .

 8. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

 9. Jayadeva says:

  இந்த ஊரு எருமைய சாரி பெருமைய நீங்களே சொல்லி மெய் சிலிர்த்துக்க வேண்டியதுதான். நானும் பதிமூணு வருஷமா இங்கதான் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன். வந்ததில இருந்து நாங்க படும் பாடு சொல்லி மாளாது. நம்மூரு மாதிரி இங்க சுருசுருப்பா இருக்க முடியல. எப்ப பாத்தாலும் மந்தமா தல மேல எதையோ தூக்கி வச்ச மாதிரி இருக்கு. சாப்பிடுறது அவ்வளவு ஈசியா ஜீரணம் ஆவது இல்ல. மொத்த Metabolic activity கம்மியாயிடுத்து. பாலை உரை குத்தினா மூணு நாளைக்கு அப்படியே இருக்கு. அப்படியே தயிர் மோர் செய்தாலும் நம்மூர் சுவை இல்ல. ஹோட்டலுக்குப் போனா எல்லாத்துலயும் வெல்லத்த போட்டு ஊத்தறான். இட்டிலின்னு இங்க குடுக்குறானுங்க அத எங்க இருந்து கண்டு புடிச்சானுங்கன்னே தெரியல. இட்டிலிக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்னு என்னால இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியல. ஆனா, ரெண்டு இட்டிலிக்கு சாம்பார் மட்டும் வஞ்சனையில்லாம ஒரு லிட்டர் ஊத்துவான். வீட்டு மனை விலை வானத்துக்கு எகிறிகிட்டு நிக்குது. எங்க வீடு கட்டினாலும் அஸ்திவாரம் போடுற வரைக்கும் ஒளிஞ்சு நின்னு பாத்துட்டு, சுவர் எழுப்பி கான்கிரீட் போடும் சமயத்து எங்கிருந்து தான் வருவானுங்களோ சொந்தம்னு சொல்லிக்கிட்டு, இரண்டு லட்சத்தை அடிச்சு பிடிங்கிகிட்டு போயிடுவானுங்க. ஒரே நிலத்த நாலஞ்சு பேத்துக்கு எழுதியும் வப்பானுங்க. இந்த ஊர்ல கார் ஈசியா வாங்கிடலாம், அதை நிறுத்த இடமும், ஓட்டிச் செல்ல ரோட்டில் இடமும் கிடையாதுங்கோ. கொஞ்சம் நுரையீரல் பிரச்சினை இருக்கிறவன் இங்க வந்தா இருமி இருமி செத்தான்.

 10. //இந்த ஊரு எருமைய சாரி பெருமைய நீங்களே சொல்லி மெய் சிலிர்த்துக்க வேண்டியதுதான். நானும் பதிமூணு வருஷமா இங்கதான் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன். வந்ததில இருந்து நாங்க படும் பாடு சொல்லி மாளாது. நம்மூரு மாதிரி இங்க சுருசுருப்பா இருக்க முடியல. எப்ப பாத்தாலும் மந்தமா தல மேல எதையோ தூக்கி வச்ச மாதிரி இருக்கு. சாப்பிடுறது அவ்வளவு ஈசியா ஜீரணம் ஆவது இல்ல. மொத்த Metabolic activity கம்மியாயிடுத்து. பாலை உரை குத்தினா மூணு நாளைக்கு அப்படியே இருக்கு. அப்படியே தயிர் மோர் செய்தாலும் நம்மூர் சுவை இல்ல. ஹோட்டலுக்குப் போனா எல்லாத்துலயும் வெல்லத்த போட்டு ஊத்தறான். இட்டிலின்னு இங்க குடுக்குறானுங்க அத எங்க இருந்து கண்டு புடிச்சானுங்கன்னே தெரியல. இட்டிலிக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்னு என்னால இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியல. ஆனா, ரெண்டு இட்டிலிக்கு சாம்பார் மட்டும் வஞ்சனையில்லாம ஒரு லிட்டர் ஊத்துவான். வீட்டு மனை விலை வானத்துக்கு எகிறிகிட்டு நிக்குது. எங்க வீடு கட்டினாலும் அஸ்திவாரம் போடுற வரைக்கும் ஒளிஞ்சு நின்னு பாத்துட்டு, சுவர் எழுப்பி கான்கிரீட் போடும் சமயத்து எங்கிருந்து தான் வருவானுங்களோ சொந்தம்னு சொல்லிக்கிட்டு, இரண்டு லட்சத்தை அடிச்சு பிடிங்கிகிட்டு போயிடுவானுங்க. ஒரே நிலத்த நாலஞ்சு பேத்துக்கு எழுதியும் வப்பானுங்க. இந்த ஊர்ல கார் ஈசியா வாங்கிடலாம், அதை நிறுத்த இடமும், ஓட்டிச் செல்ல ரோட்டில் இடமும் கிடையாதுங்கோ. கொஞ்சம் நுரையீரல் பிரச்சினை இருக்கிறவன் இங்க வந்தா இருமி இருமி செத்தான். //

  இதை நானும் வழிமொழிகிறேன் இவர் கூறியதும் உண்மை.

  இங்கு வெளிமாநிலத்தவர் அதிகம் என்பதால் நியாயமான விசயங்கள்க்கு கூட ஏன் என்று கேட்க மாட்டார்கள் (பஸ் பாஸ்,பால்,தண்ணீர்,கரண்ட கட்டணங்களை எவ்வளவு உயர்த்தினாலும் ஏன் என்று கேட்க ஆள் இல்லை).

  இப்படி இன்னும் பல விவரங்களை சொல்லாம்....

 11. Ibrahim A says:

  திரு.ஜெயதேவா,திரு.தாமஸ் ரூபன்:வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.உங்கள் கருத்துகளில் என்னக்கு உடன்பாடு இல்லை.
  பஸ் பாஸ்,பால்,தண்ணீர்,கரண்ட கட்டணங்களை உள்ளூரார்கள் யாற்றும் கேட்பதில்லை.நீங்களே உங்கள் ஊரில் இருந்தாலும் இதையெல்லாம் கேட்கமுடியுமா?கேட்டாலும் நிறுத்துவார்கள் என்று தோன்றவில்லை.
  வீட்டு வாடகை,வீட்டு மனை விலை இவைகளுக்கெல்லாம் நாம் தான் காரணம்,நம் ஊரிலே நம் பொழப்பை பார்த்தல் என் இப்படி தாறுமாறாக விலை ஏறுகிறது?
  /இரண்டு லட்சத்தை அடிச்சு பிடிங்கிகிட்டு போயிடுவானுங்க/ நீங்கள் நகரின் முக்கிய இடத்தில் மனை வாங்கினால் இந்த பிரச்சனை எல்லா நகரத்திலும் உண்டு. லோக்கல் ரவுடிகளுக்கு தண்டம் தராமல் நீங்கள் மதுரையில் ஒரு கடையோ,மனையோ வாங்கிவிட முடியுமா?
  எல்ல ஊருக்கும் ஒரு எருமை சாரி பெருமை இருக்கு அதைதான் கொஞ்சம் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.மற்றபடி இந்தியாவில் வாழத்தகுதியான சிறந்த இடம் பெங்களுர் என்று நான் சொல்லவில்லை. டிராபிக்,பார்கிங் பிரச்சனை இருப்பது உண்மைதான் அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
  இந்த வெல்லம் போட்ட சாம்பார்,இட்லி சாப்பிட்டு தான் கன்னட மக்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் எங்கே போனாலும் அந்த ஊர் சாப்பாடு தான்,சீனா,ஜப்பான் போனால் பாம்பும் தவளையும் தான் கிடைக்கும் அங்கே நாம் தான் நம்ம ஊர் உணவை தேடத்தான் வேண்டும்.இங்கே பல தமிழ்,ஆந்திரா,வடஇந்திய உணவகங்கள் உண்டு முயற்சி செய்யுங்கள்.
  நம்ம ஊரை குறை சொல்வதில்லை இப்பதிவின் நோக்கம்.மடிவாலாவில் குண்டு வெடித்த போது சில கிலோமீட்டர் தொலைவில் நான் இருந்ததால் தப்பித்தேன்.பிரச்சனைகள்,குறைகள் எல்லா ஊரிலும் உண்டு..ஆண்டிப்பட்டியிலும்,அமெரிக்காவிலும்.......ஏன் சொர்கத்திலும் கூட.வாழ்க தமிழ்...வளர்க தமிழ் நாடு.

- Copyright © துளி கடல் -