Archive for June 2010

Shutter Island (2010) அவனை தேடும் அவன்


          நம் வாழ்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது திடீரென யாரவது வந்து "நீ நினைக்கிற மாதிரி நீயில்லை,நீ வேற ....இதோ இதுதான் நீயென" புதுசா நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தினா எப்படி இருக்கும் இது தான் shutter Island படத்தின் கதை.இப்படி பட்ட குழப்பமான தீமை அழகாக சொல்லிஇருக்கிறார் இயக்குனர் மார்டின் கோர்செசே.

           1954 இல் போஸ்டன்இல் உள்ள ஷட்டர் தீவிலுள்ள மனநோய் காப்பகத்தில் நடக்கும் கதை இது.உலகின் மிக கொடிய மனநோய் கைதிகளை வைத்திருக்கும் அங்கே இருந்து ஒரு பெண் கைதி தப்பிவிடுகிறாள்.அவளை கண்டுபிடிப்பதற்காக டெடி டேனியல்ஸ்(Leanardo Dicaprio) வும் அவரது ஜூனியர் சக்கும் அரசாங்கத்திலிருந்து வருகிறார்கள், வந்த இடத்தில் வேறு ஏதோ தவறுகள் நடப்பதாக டெடி நம்புகிறான்.தீவின் ரகசியங்களையும்,அவனுக்கு தராமல் மறுக்கப்படும் நோயாளிகளின் கோப்புகளையும் கண்டறிய பெருமுயற்சி எடுக்கிறான்.இதற்கிடையில் தொலைந்து போன கைதி ரேச்சல் திரும்ப கிடைத்துவிட்டதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.(அவள் தனது மூன்று குழந்தைகளையும் நீரில் முக்கி கொன்றவள்).வந்த வேலை முடிந்துவிட்டதென சக் கருதுகின்றான் ஆனால் டெடி, தன் மனைவியை எரித்து கொன்றவனை சந்திப்பதற்காக அவனாகவே விரும்பிகேட்டு அந்த தீவிற்கு வந்திருப்பதாக கூறுகின்றான்.

    புயல் விளைவித்த சேதங்களை அங்குள்ள காவலாளிகள் சீர்படுத்திகொண்டிருக்கும் போது டெடி யாருக்கும் தெரியாமல் அங்குள்ள கைதிகளின் செல்லிற்கு சென்று அந்த கொலைகாரனை தேடுகின்றான் ,ஆனால் எதிர்பாரா விதமாக அவன் கல்லூரி நண்பன் நாய்ஸ்ஐ சந்திக்கின்றான்...அவனோ தான் இந்த நிலைக்கு வந்ததற்கு டெடியே காரணம் என்கிறான்.

      பின் அங்கே சுற்றி அலையும் போது அங்குள்ள ஒரு குகையில் மறைந்து வாழும் ஒரு பெண் டாக்டர்ஐ காண்கிறான்.அவள் இந்த தீவில் மனிதனின் மூளை சம்பந்தப்பட்ட சட்டவிரோதமான ஆராய்ச்சி நடப்பதாகவும்,அதற்க்கு இந்த தீவில் உள்ள எல்லோர் பங்கும் இருப்பதாகவும் அங்குள்ள லைட் ஹௌசிர்க்கு சென்று பார்க்க சொல்கின்றாள்.
     லைட் ஹௌசில் அவன் சீப் டாக்டர் காவ்லியை சந்திகின்றான்,இங்கே நடப்பது என்னவென்று துப்பாக்கி வைத்துகேட்கிறான்.Dr.காவ்லியோ கொஞ்சமும் பதட்டபடாமல் அவன் துப்பாக்கியை(மரத்துப்பாக்கி) வாங்கி உடைத்துபோட்டு அவனை பற்றிய மாபெரும் உண்மையை சொல்கிறார்....என்ன உண்மை?

   டெடியும் அந்த தீவில் ஒரு கொடிய மனநோயாளி தான்...எப்படி பட்டவன்என்றால் இதுதான் நடக்கணும் என்று தனக்கு சாதகமான,பொய்யான நிலையை அவனே உருவாக்கி அதன் படி நடந்துகொள்கிறான்.அடுத்தவர்களையும் அதுபோலே பார்கிறான்.
எப்படிஎன்றால் 67 கைதிகளில் 66 மட்டுமே இருப்பதாகவும் 1 கைதி(டெடியின் மனைவியை கொன்றவன்) தப்பிவிட்டதாகவும் அங்குள்ள டாக்டர்களிடம் ஒரு காட்சியில் கூறுகின்றான் ஆனால் அந்த தப்பிய கைதியே அவன் தான் ......அவனே அவனை கண்டுபிடிக்க.....வேண்டாம்ங்க சொன்னால் மேல மேல கொழப்பும்.....மொத்தத்தில் மிக அருமையாக பின்னப்பட்ட சைகோலாஜிகல் த்ரில்லர்.
   ஜூனியர் சக் தான் டெடியின் டாக்டர்,அவனை கண்காணிப்பதற்காகவே அவனுடனே சுற்றி திரிகிறார்.மொத்த டாக்டர்கள்,காவலாளிகள் அனைவருமே டெடியை பற்றி தெரிந்தவர்கள் தான்.படம் பார்பவர்களை கடைசி 10நிமிடங்களில் டெடியை போலவே நம்மையும் முட்டாளக்குகிறார்கள்.

ஆனாலும் சில இடங்களில் சின்ன சின்ன க்ளு கிடைகிறது
1 தலைவலி என்று அடிக்கடி டெடி சொல்லவும் அவனுக்கு Dr .காவ்லி மாத்திரை தருவது.
2 சிறையில் சந்திக்கும் தன் நண்பன் உன்னால் தான் நான் இங்கே வந்தேன் என்பது.
3 முதன் முதலில் அங்கே வரும் போது சில நோயாளிகளும்,காவலாளிகளும் அவனை கலக்கத்துடன் பார்ப்பது.
4 மிருகமாக வாழ்வதை விட,மனிதனாக இறப்பதே மேல் என்று டெடி சொல்வது.

நான் ரசித்தது:
மிக அருமையான லொகேஷன்,லைட்டிங்,எல்லசீன்களிலும் ஏதோவொரு சூட்சுமம் வைத்தே எடுக்கப்பட்டது,நடிகர்கள்:லியனார்டோ டிகாப்ரியோ, பென் கிங்ஸ்லே (அட்டன்பரோவின் "தி காந்தி" படத்தில் காந்தியாக வந்தவர்),டெடிஇன் ஜூனியர் சக்.......நிச்சயம் படம் பாருங்க.டிகாப்ரியோ பத்தி சொல்லியே ஆகணும்

*குழந்தைகளை கொன்ற மனைவியை கட்டிக்கொண்டு வயிற்றில் சுடுவதாகட்டும்.
*தான் யார் என்று Dr.காவ்லி,தனக்கு சொல்லும் போது நம்பியும் நம்பாமலும் தவித்து காட்டும முகபாவனை ஆகட்டும்....
டைடானிக்இல் லவர்-பாயாக இருந்தவரா இவர்...நிச்சயமாக கடந்த நாலைந்து வருடங்களில் வந்த படங்களில் இருந்து இவர் நடிப்பின் அடுத்த தளத்திற்கு சென்று விட்டார் எனக்கூறலாம்.(blood diamond,the departed,body of lies கிடைத்தால் பாருங்கள்).

இப்போ தலைப்பிற்கு போகலாம்....
ராவணன் கதை என ஒரு Fwd. மெயில் வந்தது
கிட்டத்தட்ட இதே பாணியில் தான் ராவணனும் எடுக்கப்பட்டிருக்கும் என நினைகிறேன்.காட்டுக்குள் இருக்கும் போராளியான விக்ரமை பற்றி ப்ரித்திவிராஜ் ஐஸ்வர்யா ராயிடம் சொன்னதும் அவன்பால் ஈர்க்கப்பட்டு
....தானே அவனிடம் போய் சிக்கிகொண்டதாக கற்பனை செய்து கொள்ளும் கதையாக இருக்கலாம்.
 பிறசேர்க்கை: ராவணன் படம் நான் எழுதியது போல இல்லையாம்

1 .அப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ.
2 அந்தளவெல்லாம் யோசிக்க நம்மிடம் ஆட்களில்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.
இன்னும் கூட நிறைய சொல்ல தோன்றுகிறது நம் படங்களை பற்றி.....நமக்காக படம் எடுக்கிறோம் என்று சொல்லு சொல்லியே நம்மை கெடுத்து வைத்திருக்கிறார்கள்.என்னத்த சொல்ல......

பின்குறிப்பு:ஷட்டர் ஐலேன்ட் படத்தில் டிகாப்ரியோவிற்கு இருக்கும் நோயை "schizophrenic" அல்லது "dissociative identity disorder" என்று கூறுகின்றனர்.


அன்புடன்
Ibrahim A

                                                                         *!!!* 

- Copyright © துளி கடல் -