படத்தின் விமர்சனத்தின் (என் பார்வையில்) முதல் பகுதிக்கு செல்ல இங்கே கிளிக்கவும்
ஒரு ஜென் குருவின் வாழ்க்கை:Forrest Gump 1

வின்ஸ்டன் க்ரூம் 1986 இல் எழுதிய நாவலை படமாக எடுத்திருக்கிறார் ராபர்ட் ஜேமிக்ஸ்.
படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு ஆழமான அர்த்தம் புதைந்திருக்கும்....
1 .முதல் காட்சியில் கம்ப் பேச தொடங்கும் முன் ஒரு இறகு பறந்து வந்து அவன் காலடியில் விழுகிறது,அதை எடுத்து அவன் புத்தகத்தில் வைத்துக்கொள்கிறான்.பின் இறுதிக்காட்சியில் தன் மகனை பள்ளிக்கு அனுப்பும் போது அதே இறகு கீழே விழுந்து காற்றில் எழும்பி பறக்கும்.காற்றில் அடித்துச்செல்லப்படும் இறகு தான் வாழ்கை,அது போகிறபோக்கில் நாமும் போகிறோம்...இந்த கதையின் நாயகனும் அப்படி தான் எதையும் தனக்கென வைத்துக்கொள்ளது அன்பையும்,எளிமையையும் காட்டிச்செல்கிறான் ,எதுவும் அவன் போக்கை திசை திருப்புவதில்லை.....a very good motivational movie.
     நம்ம படங்களில் ஒரு ஊனமுற்றவனயோ,மனநிலை சரியில்லாதவனயோ,கர்பவதியயோ காட்டினால் நிச்சயமாக ஏதோவொரு காட்சியில் அவர்களை அடித்தோ,சித்ரவதை செய்தோ பார்வர்களுக்கு இருக்கும் மனதின் மென்மையான ஓரத்தை bladeஆல் கீறி காசு பார்பார்கள். (நக்கலாக சொல்லவில்லை,ஆற்றாமையில் சொல்கிறேன்).   டாம் ஹான்க்ஸ்:இவரது நடிப்பை "saving private ryan,The Terminal,Cast Away,Philadelphia" போன்ற படங்களை பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன்.லேசாய் மனநிலை பிறழ்ந்த,அறிவுத்திறன் குறைந்த வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார் எனலாம்.டாம் ஹான்க்ஸ்ஐ சுற்றி தான் மொத்த படமே இவர் (கொஞ்சம் லூசுத்தனமாக,திக்கி பேசும்) வாய்ஸ்-ஓவரிலையே நகரும்.ஆனாலும் இவரது நடிப்பும்,உடல்-மொழியும் (body language?) அந்த குரலுக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும். கம்ப்ஆக நடித்திருக்கும் சிறுவனிடம் இருக்கும் மேனரிசம்,வாய்ஸ் டோன் படம் முழுவதும் டாம் ஹான்க்ஸ்இடம் தெரியும்.

அலன் சில்வெஸ்டிரி யின் டைட்டில் இசை என்னை மிகவும் கவர்ந்தது.படம் முழுவதும் ஆர்ப்பாட்டமில்லாத இசை.

செயல்திறன் அதிகமற்ற கம்ப் வாழ்கையை லேசாகவும்,பற்றில்லாமலும் எடுத்துக்கொண்டு அன்பாலும்,பிரியதாலும் நிறைத்தால் பணத்தையும்,புகழையும் எளிதாக வென்று,எளிதாக அதைத்தாண்டியும் போகின்றான்.

பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்சிகளை தொட்டுச்செல்லும் இப்படம் எடுக்க ஒன்றே ஒன்று தான் தேவைபட்டிருக்கும் "Keep things simple", possitive attitude .....மனிதர்களின் உள்வாழ்கையை,உணர்ச்சிகளை காட்டுகிறேன் பேர்வழி என்று ரொம்பவும் குழப்பி,நம்மையும் குழப்ப முயற்சிக்கவில்லை.

இந்த படம் ஒரு அனுபவம்,காற்றில் பறக்கும் இறகானதை போல ஒரு அனுபவம்.

பின்குறிப்பு:Forrest Gump (1994) ஆம் ஆண்டு வெளிவந்து 6 ஆஸ்கார்களை வாங்கிய இந்த படத்தை என்ன விமர்சனம் செய்தாலும் சாதாரணமாகவே தோன்றும்.பார்த்து அனுபவிப்பது நல்லது.மேலும் போன பதிவில் திரு.ஸ்ரீதர் அவர்கள் பின்னூட்டமிட்டதை போல இதில் கவனிக்க வேண்டியது நிறையதான் இருக்கிறது.ஆனால் ரஜினி நடித்த சிவாஜி படத்திற்கு விமர்சனம் எழுதுவதை போல எழுதிவிடமுடியாது.ஏனெனில் நமக்கு காட்சிகளின் முக்கியத்துவத்தை விட ரஜினியின் செயல்களே முக்கியமாகப்படும்.அவரை வைத்தே காட்சிகள் நகர்த்தபட்டிருக்கும்.ஆனால் இதுபோன்ற படங்களுக்கு காட்சியின் making ,built-up தான் உயிரே,அப்படியிருக்க எல்லா காட்சிகளையும் உணர வைக்கவோ,புரிய வைக்கவோ எழுதத்தேவையில்லை என எண்ணுகிறேன்.
 
அன்புடன்
Ibrahim A

                                                                  **|||**

8 Responses so far.

 1. rk guru says:

  நல்ல பதிவு .......வாழ்த்துகள்

 2. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி திரு.குரு

 3. The Rebel says:

  Very Good Review!!
  I didnt see the zen angle in it.

 4. Ibrahim A says:

  Thanks for coming Rebel

 5. ஃபாரஸ்ட் ஹம்ப்-படத்தில் ஓட்டம் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். பயத்தில் பழக்கமாகும் ஓட்டம்.. அதற்கப்புறம் ஃபாரஸ்ட்டுக்கு வாழ்க்கை முழுதும் கூடவே ஓடி வரும். சொல்லப்போனால் அவனின் உறுதுணையே அதுதான்.

  படத்தை டாம்-மின் நடிப்பு யதார்த்த வெளியில் காணக்கிடைக்கும் திரைக்காட்சிகளை தவிர்த்து யோசித்தால் ஓட்டம் என்ற நிகழ்வே பிரதானமாக தோன்றுகிறது. அது தரும் படிப்பு பிரத்யேகமானதும் கூட.

  ஓட்டம் என்பது என்ன? நீங்கள் உங்கள் இயல்பான வாழ்க்கையிலிருந்து விடுபடும் ஒரு ஒத்திகை. வகுக்கப்பட்ட நேர அளவுகளை, முன்னேற்பாடான நிகழ்வுகளை அதிரடியாக மாற்றி அமைக்க முயலும் போராட்டம்.. அல்லது முடிவுகளை நம் முயற்சியால் நினைத்தபடி ஏற்படுத்திக் கொள்ளுதல். ஓடிக்கொண்டிருப்பவன் காலம் வேறு அளவிலானது. அதைப் பொறுத்து அவன் உலகமும் புறவிசையும் மாறுபடுகிறது.

  படத்தில் ஃபாரஸ்ட்டுக்கு எப்போதும் மற்றவர்களுக்காக ஓடியே பழக்கம். முதலில் ஓடும் போதுகூட தோழியின் பதட்டம் ஒரு பின்னணியாக அமைகிறது. தனக்காக ஒரேயொரு முறை ஓடுகிறான். எந்த இலக்குமில்லை. வேகஅளவு நிர்ப்பந்தங்களுமில்லை. அவனின் பிரபல்யத்தைக் கொண்டு சில 100 மக்களும் அவன் பின்னால் சேர்ந்து கொள்கிறார்கள். அனைவரும் ஓடுகிறார்கள். ஓடிக்கொண்டே... ஆனால், யாருக்கும் எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரிவதில்லை. ஃபாரஸ்ட் ஹம்ப் முதற்கொண்டு.

  ஒரு இடத்தில் நின்று சடாரென திரும்பி ஓடியது போதும் வீட்டுக்கு போலாம் என்று அவன் சொல்லும்போது பின்னால் ஓடியோடி வந்த கூட்டம் திக்கித்து நிற்கிறது!

  நம் வாழ்வின் நம்பிக்கைகள், வழி நடத்துதல்கள், வழிபாடுகள், குருக்கள் (மதம், சுயம், தொழில்) என எதுவும் எக்கணமும் திடீரென நின்று சடாரென திரும்பக் கூடியதுதானே? நம் ஓட்டத்தின் இலக்கு முன்னோடுபவனாக மட்டும் இருக்கக் கூடாது - எவ்வளவு நுண்ணிய பாடம்!!

  படம் அல்லது ஏதாவது கலை ஒரு நுண்ணோக்கி போலத்தான். கருவியை விட கருவியிலிருந்து கிடைக்கும் செய்திகள் கருவியைவிட நுணுக்கமானது - சிலசமயம் அழகானதும் கூட!

 6. ஃபாரஸ்ட் ஹம்ப்-படத்தில் ஓட்டம் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். பயத்தில் பழக்கமாகும் ஓட்டம்.. அதற்கப்புறம் ஃபாரஸ்ட்டுக்கு வாழ்க்கை முழுதும் கூடவே ஓடி வரும். சொல்லப்போனால் அவனின் உறுதுணையே அதுதான்.

  படத்தை டாம்-மின் நடிப்பு யதார்த்த வெளியில் காணக்கிடைக்கும் திரைக்காட்சிகளை தவிர்த்து யோசித்தால் ஓட்டம் என்ற நிகழ்வே பிரதானமாக தோன்றுகிறது. அது தரும் படிப்பு பிரத்யேகமானதும் கூட.

  ஓட்டம் என்பது என்ன? நீங்கள் உங்கள் இயல்பான வாழ்க்கையிலிருந்து விடுபடும் ஒரு ஒத்திகை. வகுக்கப்பட்ட நேர அளவுகளை, முன்னேற்பாடான நிகழ்வுகளை அதிரடியாக மாற்றி அமைக்க முயலும் போராட்டம்.. அல்லது முடிவுகளை நம் முயற்சியால் நினைத்தபடி ஏற்படுத்திக் கொள்ளுதல். ஓடிக்கொண்டிருப்பவன் காலம் வேறு அளவிலானது. அதைப் பொறுத்து அவன் உலகமும் புறவிசையும் மாறுபடுகிறது.

  படத்தில் ஃபாரஸ்ட்டுக்கு எப்போதும் மற்றவர்களுக்காக ஓடியே பழக்கம். முதலில் ஓடும் போதுகூட தோழியின் பதட்டம் ஒரு பின்னணியாக அமைகிறது. தனக்காக ஒரேயொரு முறை ஓடுகிறான். எந்த இலக்குமில்லை. வேகஅளவு நிர்ப்பந்தங்களுமில்லை. அவனின் பிரபல்யத்தைக் கொண்டு சில 100 மக்களும் அவன் பின்னால் சேர்ந்து கொள்கிறார்கள். அனைவரும் ஓடுகிறார்கள். ஓடிக்கொண்டே... ஆனால், யாருக்கும் எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரிவதில்லை. ஃபாரஸ்ட் ஹம்ப் முதற்கொண்டு.

  ஒரு இடத்தில் நின்று சடாரென திரும்பி ஓடியது போதும் வீட்டுக்கு போலாம் என்று அவன் சொல்லும்போது பின்னால் ஓடியோடி வந்த கூட்டம் திக்கித்து நிற்கிறது!

  நம் வாழ்வின் நம்பிக்கைகள், வழி நடத்துதல்கள், வழிபாடுகள், குருக்கள் (மதம், சுயம், தொழில்) என எதுவும் எக்கணமும் திடீரென நின்று சடாரென திரும்பக் கூடியதுதானே? நம் ஓட்டத்தின் இலக்கு முன்னோடுபவனாக மட்டும் இருக்கக் கூடாது - எவ்வளவு நுண்ணிய பாடம்!!

  படம் அல்லது ஏதாவது கலை ஒரு நுண்ணோக்கி போலத்தான். கருவியை விட கருவியிலிருந்து கிடைக்கும் செய்திகள் கருவியைவிட நுணுக்கமானது - சிலசமயம் அழகானதும் கூட!

 7. படம் பற்றிய பார்வைக்கும் உழைப்பான எழுத்துக்கும் வாழ்த்துக்கள் இப்ரஹிம்!

 8. Ibrahim A says:

  நன்றி திரு.ஜெகன் படத்தை பற்றிய உங்கள் எண்ணங்களுக்கும்,ஊக்கத்திற்கும்

- Copyright © துளி கடல் -