சலூனில் பயணிக்கும் இசை

முடியை திருத்திக்கொண்டு
அழகாகும் எண்ணமெல்லாம்,
எப்பொழுதும் இருந்ததில்லை.
காதருகில் "க்ரீச்,க்ரீச்" எனும்
கத்திரியின் இசைக்காகவே செல்கிறேன்
ஒவ்வொருமுறையும் சலூனிர்க்கு.


                                                                        _______________________உன்னை சேர்ந்த உலகம்

உனக்காய் ஒரு உலகம் படைக்கத்தொடங்கினேன்.

வெயில்தர சூரியனும்
நிழல்தர சோலைகளும் வைத்தேன்.

கறுப்பை கொட்டி இரவுகள் செய்தேன்.
ஒரு நிலவை உருட்டிவிட்டு
நட்சத்திரங்களை தூவினேன்.

நீ குதித்து விளையாட நீர்நிலைகளையும்
விதைத்து உண்ண நிலங்களையும் அமைத்தேன்.

பாசத்திற்கு தாயயும்
பயத்திற்கு கடவுளை படைத்தேன்.

ஓர்நாள்
நான் படைத்த உலகத்தில்
உன்னைப்புகுத்தினேன்.

 "இதில் நீ எங்கே?"என்றாய்.
புரியாமல் விழித்த என்னிடம்
"நீ இல்லாத எதுவும் வேண்டாமெனக்கு
அது உலகமாகவே இருந்தாலும்"என்றாய்.


அன்புடன்
 Ibrahim A  
                                                                  **|||**
                                        

8 Responses so far.

 1. Anonymous says:

  Unga padaipu nala iruku. Yar antha pen nu therinjukalama

 2. வருகைக்கு நன்றி திரு.அனானி.
  திருமணம் ஆகிவிட்டது அந்த பெண்ணை பற்றி இப்போது பேசினால்
  மனைவியிடம் சிக்குவது உறுதி. உங்க மெயில் ஐ.டி குடுங்க தனியா, உங்களுக்கு மெயில் பண்றேன்.:-)

 3. Anonymous says:

  en mail id ketrukingle ithu unga manaiviku therinja prachanai agatha?? nan thiru.anonymous ala, selvi.anonymous...thangal kavanathirku....

 4. Anonymous says:

  en mail id ketrukingle ithu unga manaiviku therinja prachanai agatha?? nan thiru.anonymous ala, selvi.anonymous...thangal kavanathirku....

 5. Anonymous says:

  en mail id ketrukingle ithu unga manaiviku therinja prachanai agatha?? nan thiru.anonymous ala, selvi.anonymous...thangal kavanathirku....

 6. Anonymous says:

  ஸ்வரஸ்யமாக எழுதும் தங்களின் அடுத்த படைப்புக்காக காத்திருக்கும் உங்கள் தீவிர ரசிகை.

 7. வருகைக்கு நன்றி "தீவிர ரசிகை".....
  உங்களுக்காக நிறைய எழுத முயற்சிக்கிறேன் :-)

 8. @அனானி:மனைவிக்கு தெரிஞ்சா சமாளித்துக்கொள்வேன் பிரச்சனை இல்லை!
  அவங்க புரிஞ்சிப்பங்கன்னு நம்பறேன்!

- Copyright © துளி கடல் -