Archive for October 2010

Se7en:ஏழு கொலைகளின் கதை


டேவிட் பிஞ்சர் எடுத்த Se7en(1995) திரைப்படம் திடுக்கிட வைக்கும் ஆச்சர்யங்கள்+திருப்பங்கள்  கொண்டது.படத்தினுடைய கதை சொல்லும் பாங்கு (narration) என்னை மிகவும் கவர்ந்தது.ஒரு டிராமா போல எடுக்கப்பட்டு,ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை அந்த த்ரில்ஐ வைத்துக்கொள்ளச்செய்திருப்பார்கள்.

      சொமேர்செட் என்ற பழுத்த,அடக்கமான,பணியிலிருந்து ஓய்வு பெற போகும் துப்பறிவாளர் சொமேர்செட் (இப்படி ஒரு பாத்திரம் என்றால் நம் நினைவுக்கு வருபவர் யார்?....அவரேதான்....தி கிரேட் "மோர்கன் ப்ரீமேன்") அவருடன் இளம் துப்பறிவாளன் மில்ஸ் (பிராட் பிட்) உம் ஒரு திங்கட்கிழமை மழை நாளில் ஒரு கொலையை ஆராய்கிறார்கள்.ஒருவனை அளவுக்கதிகமாக தின்ன வைத்தே கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறான்,அங்கிருந்து அவர்களுக்குள் வாதம் துவங்குகிறது,அங்கே நாமும் படத்தோடு மூழ்கத்தொடங்குவோம்.
         
         சொமேர்செட் மேலதிகாரியை சந்தித்து தன்னுடைய இந்த கடைசி கேசை மில்சிடம் கொடுக்குமாறு கூறி,இந்த நகரத்தின் கொடூரத்தை தான் நிறைய கண்டுவிட்டதாகவும்,இதிலிருந்து தமக்கு விரைவில் ஒய்வு கொடுக்குமாறும் கேட்கிறார்.மில்ஸும் தன்னால் இதை தனியாக பார்த்துக்கொள்ள முடியுமென கூறுகின்றான்.ஆனால் மேலதிகாரி சோமர்செட் இடம் மில்ஸுக்கு இந்த கேஸ்ல் உதவி செய்துவிட்டு போகுமாறு சொல்கிறார்.
 இதற்கிடையில் இரண்டாவது கொலையும் நடக்கிறது ,கொலை நடந்த இடத்தில் ரத்தத்தால் "GREED" (பேராசை) என எழுதப்பட்டிருக்கிறது(நம் அந்நியன் பாணியில்).ஏதோ சந்தேகத்துடன் முதல் கொலை நடந்த இடத்திற்கு சென்று அங்கே தேடி "GLUTTONY"(அதிகமாய் சாப்பிடுதல்,குடித்தல்) என்று எழுதப்படிருப்பதை கண்டுபிடிக்கிறார்.
         அந்த ஆதாரத்தோடு வழக்கை விடமுடியாமல் நூலகத்திற்கு சென்று சில குறிப்புகள் எடுத்துக்கொண்டு மேலதிகாரியிடம் சென்று இது ஜான் மில்டன் "paradaise lost" இல் வரும் ஏழு பாவங்களை பற்றியது.முதல் இரண்டு பாவங்களுக்காக "Gluttony ,Greed " இரண்டு கொலைகள் முடிந்துவிட்டன இனி மீதம் ஐந்து கொலைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறதெனவும் ,கொலைகாரன் சைக்கோதனமாக மட்டுமின்றி மெதுவாய் யோசித்து பதட்டமின்றி தொடர் கொலைகளை நிறைவேற்றுகின்றான் எனவும் வயிற்றில் புலியை கரைக்கிறார் சொமேர்செட்.இந்த ஆதாரங்களை மில்சிடமும் கொடுத்து விலக முற்படுகிறார்,ஆனால் போகப்போக தவிர்க்கமுடியாமல் வழக்கிற்குள் தன்னை இழுதுக்கொள்கிறார். 
 
        இரண்டாவது கொலையில் கிடைக்கும் finger-prints ஐ வைத்து அது விக்டர் என்பவனுடையது என்றும் அவனது வீடிற்கு செல்கின்றனர். அங்கே உயிருள்ள பிணம் போல கிடக்கும் விக்டர்உம் ,அருகில் பல போட்டோகள் கிடைகின்றன அவை விக்டர்ஐ கட்டிபோட்டு தினமும் ஒன்று என்ற வீதம் ஒரு வருடமாய் எடுத்த போட்டோ.கருவாடாய் கிடக்கும் அவன் உயிரோடுதான் இருக்கிறான்,அவன் சிறுமியை கற்பழித்த குற்றம் சுமத்தப்பட்டவன்.
      பின் நூலகத்தில் சென்று "ஏழு பாவங்கள்"பற்றிய புத்தகங்களை வாடகைக்கு எடுத்தவர்களை தேடி துப்பறிகின்றனர்.அந்த வரிசையின் படி ஜான் டொ என்பவனின் வீட்டிற்க்கு செல்கின்றனர்.அவனோ இவர்களிடமிருந்து தப்பிக்க பார்க்கிறான்.மிக நீண்ட துரத்தலில் மில்ஸை அடித்துபோட்டு (கொல்லாமல்) தப்பிவிடுகிறான் ஜான் டொ.ஜான் டொவின் அபார்ட்மென்ட்டை குடைந்து மீதமுள்ள கொலையாகபோகும் ஆட்களின் குறிப்புகளை கண்டறிந்து அங்கே செல்கின்றனர்.அங்கே ஒரு விபசாரியும் அவளது கஸ்டமரும் கொலை செய்யப்பட்டு கிடக்கின்றனர்.(இவர்களை ஜான் மிக வித்யாசமாக கொன்று வைத்திருக்கிறான்),அங்கே சுவர்களில் "LUST" (காமம்) என எழுதப்பட்டிருகிறது.
      அடுத்தநாள் ஒரு மாடல் மூகறுபட்டு இறந்துவிட்டிருகிறாள் அவளை கொன்ற கையோடு ,ரத்தம் தோய்ந்த உடையோடு நம்ம ஜான் சரண்டர் ஆகின்றான்.
சொமேசெட் இடமும்,மில்சிடமும் தன்னை பாவமனிப்பு தர விழைந்தார்களானால் மீதமுள்ள இரண்டு பிணத்தை காட்டுகிறேன் என்கிறான்.அதற்க்கு அவர்கள் சம்மதிக்கவும் மூவரும் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.போகிற வழியில் மில்ஸை எரிச்சலாக்கி தீயவர்களை அடையாளங்காட்டவே இந்த கொலைகளை செய்ததாகவும்,இதனால் பலரின் நினைவில் நானிருப்பேன் என்று கூறிக்கொள்கிறான்.

இறுதிக்காட்சி:ஓரிடத்தில் வண்டியை நிறுத்தசொல்லிவிட்டு ஜான் மில்ஸை மட்டும் தனியே கூட்டிபோகிறான்.சிறிது நேரத்தில் தனியாக நிற்கும் சொமேர்செட்இடம் கூரியர் வண்டி வந்து ஒரு பார்சலை தருகிறது. அதை பிரித்து பார்க்கும் சொமேசெட் அதிர்ந்துபோய் தொலைவில் இருக்கும் மில்சிடம் ஓடுகின்றார்.
அதே நேரத்தில் அங்கே ஜான் மில்சிடம் "உன் வாழ்கையை கண்டு நான் பொறாமை கொள்கிறேன்,நீ இல்லாத போது உன் மனைவியிடம் ஒரு கணவனாக நடக்க முயன்றேன்...ஆனால் அவள் அதற்க்கு அவள் ஒத்துக்கொள்ளவில்லை...உங்கள் இருவருக்குமான அன்பை பார்த்து பொறாமை கொண்டேன் .....அவளிடம் அதற்க்கு மாற்றாக வேறொன்றை கொண்டுவந்துவிட்டேன்" என்கிறான்.நடக்கபோகும் விபரீதம் புரிந்து தடுக்க ஓடும் சொமேர்செட் வருவதற்குள்ளாகவே ஜான்ஐ சுட்டுவிடுகிறான் மில்ஸ்.
       ஆக ஜான்இன் "ENVY" பொறாமைக்கு அவனுக்கு மரண தண்டனை கிடைத்துவிட்டது. மில்ஸின் கோபப்பட்டு கொன்றதற்காக அவனுக்கு தண்டனை கிடைத்துவிடும்.கடைசி கொடும்பாவமான "WRATH" கடுங்கோபத்திற்கு ஜான் கொன்றதற்காக மில்சிர்க்கு தண்டனை கிடைத்துவிடும்.
இப்படியாக அந்த ஏழு பாவங்களின் மீதே படம் நகரும்,படம் முழுவதும் ஒரு அழுக்கான,சோகையான ஒளியிலே படமாக்கப் பட்டிருக்கும்.
அதுவே காட்சிகளை sick & serious ஆகவும் நகர்த்தும்.அருமையான நடிகர் தேர்வு,படத்தின் ஆரம்பக்காட்சிகளில் துறுதுறுப்பான மில்ஸ் முந்திரிக்கொட்டைதனமாக எதாவது பேசியும்,செய்தும் சொமேர்செட் இடம் எகிறுவான்,ஆனால் முதிர்ந்த சொமேர்செட் தன்னுடைய புத்திசாலிதனதாலும்,பக்குவதாலும் செய்யும் செயல்களாலும் மில்ஸும் அவரிடம் சரண்டராகி விடுவான்.
ப்ரீமேன்,என்னை மிகக்கவர்ந்த இவரை பற்றி ஒரு தனிப்பதிவே போட வேண்டும்,இவரின் சில படங்களை பார்த்தாலே இவரின் எல்ல படங்களையும் பார்க்கத்தூண்டும்.அவரின் முகமும்,குரலும்,உடல் மொழியுமே நம்மை வெகுவாக கவர்ந்துவிடும்.Simple and Best.

மொத்தத்தில் 7 கதை சூழ்ந்த ஒரு அருமையான த்ரில்லர் படம்.

அன்புடன்
Ibrahim A
                                                                          ***|||***

ட்வீட் சாப்பிடுங்க!!!

என் சிறந்த ட்வீட்டுகள் (அல்லது) அப்படி நானே  கருதிக்கொள்வது:* சை...கக்கூசில் "இருக்கும்" போது கூட ட்விட்டரில் என்ன எழுதலாம் என்றே தோன்றுகிறது......இது கூட அங்கே தோன்றியது தான்!!!!
 
* நமது ஹீரோக்கள் வில்லனிடம் கடுமையாக அடிவாங்கி ஆஸ்பிடலில் சேர்ந்தாலும்-உடனே எழுந்து,ரத்தங்கசிய Exercise செய்துவிட்டுத்தான் அடிக்கப்போவார்கள்.
 
* ஆபீசில் எத்தனை முறை fire drill செய்தாலும் ,உண்மையாய் நெருப்பு வரும் நாளில் ஏழாவது மாடியில் இருந்து குதித்துவிடுவேன் என்றே நினைக்கிறன். 
 
*ரோஜாப்பூவில் ரத்தம் வருவது,சட்டையில்லாத நாயகன் ஆயுதத்துடன் முறைப்பது தான் இன்றும் கன்னட பட போஸ்டர்களின் அடையாளம்.
 
* பாட்டியை சாகடித்து எழுதும் லீவ் லெட்டர்,காதலி/மனைவிக்கு கடிதம் முதல் இன்று ட்விட்டரில் எழுதும் வரை எல்லாமே பொய் தான்.பொய்யில் புனைந்த உலகமடா!! 

* பழைய திருமண ஆல்பங்கள் எல்லாவற்றிலும் ஜோடிகளுக்கு பக்கத்தில் நின்று போஸ் கொடுக்கும் சிறுவனை இப்பொழுது நேரில் காணின் சிரிப்பு வருகிறது.
 
* இனி மதுரையை மையமாக வைத்து "அவிங்ய,இவிங்ய" என்று படம் எடுத்து படுத்துபவர்களின் காதுகளை கடித்து துப்ப வேண்டும்.

 * இப்போதெல்லாம் blogger இலும்,twitter இலும்,face book இலும் நிறைய எழுதுகிறேன்! நிறைய படிக்கிறேன் !ஆபீசில் நிறைய சும்மா இருப்பதால்!!!

 
கீழே உள்ள லிங்கை சுட்டி   என்னை ட்விட்டரில் தொடரலாம்.
http://twitter.com/RojavinKadhalan 


அன்புடன்
Ibrahim A
                                                                    ***|||***
Tag : ,

- Copyright © துளி கடல் -