பெயர்களில் வாழ்கிறவர்கள்

இடிந்த வீடுகளில்,
கோவில் சுவர்களில்,
பொதுக்கழிபிடக்கதவுகளில்,
பூங்கா பெஞ்சுகளில்,
பாறைகளின் அடிப்புறத்தில்,
பச்சையாக மார்பில்-இப்படி
எங்கும் எழுதப்படிருக்கிறது
"கலா-செந்தில்","ஜூலி-சேகர்",
எனும் ஜோடிப்பெயர்கள்.
அவர்களை பார்த்தால் கேட்க வேண்டும்,
திருமணப்பத்திரிக்கையில் இப்படி
எழுதப்படிருக்கிறதாவென! 
                                                
அன்புடன் 
Ibrahim A             
                                    

6 Responses so far.

 1. Samudra says:

  முதல் கவிதை நன்றாக இருக்கிறது...

 2. நன்றி சமுத்ரா

 3. காதலி நச்சென்று வைத்த முதல் போல,

  அம்மா பொசுக்கு என வைத்த சூடு போல,

  பேசாக ஒரு நல்ல கவிதை..

 4. வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்...

 5. வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி அருணா.

- Copyright © துளி கடல் -