ஆண்கள் அப்படித்தான்

பஸ்சோ,ரயிலோ
அலுவலக நேரப்பிதுங்கி வழியும்
காலையோ,மாலையோ
கூட்ட நெரிசலில்
தொத்தித்தொங்கிக்கொண்டு வரும்-நீங்கள்
யாருடைய தாயோ,தமக்கையோ
யோசித்ததில்லை நாங்கள்.
லேசாய் சரியதொடங்கியிருக்கும்
உங்கள் முந்தானையின் மீதேஇருக்கும்
எம் கண்கள்.
நாங்கள் அப்படித்தான்.

____________

பெரியவிழிகளும்,நெடுங்கொண்டையுமாய்
அமர்ந்திருப்பாள் அம்மன்-அவளுக்கு
சந்தனமும்,பாலுமாய் அபிஷேகமும்
பூவும்,பொன்னுமாய் அலங்காரம் நடக்கும்
தெய்வீகபோதை சூழ்ந்திருக்கும் அங்கே-ஆனாலும்
மேடையில் ஆடும்
கரக்காட்டகாரியின்
கூரான மார்புகளிலேயே இருக்கும்
எம் கண்கள்
நாங்கள் அப்படித்தான்.
_____________


குறிப்பு:ஒரே தலைப்பில் எழுதப்பட்ட இரு வேறு கவிதைகள்.

அன்புடன்
Ibrahim A

15 Responses so far.

 1. இது முழு நேர்மையில்லை.... இரண்டாம் கவிதை கூட சரியாக படுகிறது.... முதல் கவிதை முழு நேர்மை இல்லைங்க .

 2. இது முழு நேர்மையில்லை.... இரண்டாம் கவிதை கூட சரியாக படுகிறது.... முதல் கவிதை முழு நேர்மை இல்லைங்க .

 3. @கருணாகரசு நேர்மை இல்லையென்றால்?
  இப்படி எல்லாம் நடப்பதில்லை என்று கூறுகின்றீர்களா?

 4. நேர்மைதான், கவிதை சாட்டையடியாய் இறங்குகிறது போலும்

 5. வருகைக்கு நன்றி திரு.மைதீன்

 6. கவிதை நடை நலம்.
  கருத்தில் பேதமிருந்தாலும், ரசிக்கிறேன்.

 7. வருகைக்கு நன்றி திரு.ராஜன்

 8. She-nisi says:

  நிச்சயம் மறுக்கமுடியாத உண்மைதான்..

  நல்லதொரு கவிதை

 9. பாராட்டுக்களுக்கு நன்றி she-nisi

 10. Anonymous says:

  neengale ambalangala asingapaduthunga

 11. @Anonymous:idhu kavidhainga...en kolgayo,sorpozhivo illai.....
  oru vagayaana saatayadi thaan.....thappu seiyiravanga purinji kitta sari......varugaikku nandri :-)

 12. Anonymous says:

  unmaithango,perumbalumappadithango,maruppathirkku elle.

 13. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி அனானி

 14. Maruka mudiyatha unmai than ibrahim . unmaiyai sollumpothu ..manasu konjam varuthapadum enpathum unmaiyea ..varutham vanthal thappu iruku enbathum unmayea..anal Ankal indrum apdi than .. ithum maruka mduiyatha unmayea... ithai parkathan nichayamaga anaga iruka mudiyathu .. ithum unmayea

 15. வருகைக்கு நன்றி கவி அரசன்....இது ஒரு மாதிரி வஞ்சப்புகழ்ச்சி அணியில் எழுதப்பட்டது....இங்கு நான் ஆண்களுக்கு துளியும் சப்போர்ட் பண்ணவில்லை...சுட்டிக்காட்டவே விரும்புகிறேன்.

- Copyright © துளி கடல் -