ஜனித்தலின் விதி
பெருத்த வயிறும்
கடின மார்புகளும்
ஒன்றாய்ச் சேர்ந்து பெரிதாய் மூச்சிரைப்பாள்.

பனிக்குடம் உடைந்த நீரும்
ரத்தமும்,வியர்வையும்-அவள்
தொடைகளின் ஊடே வழிந்தோடும்.

"முக்கு,முக்கித்தள்ளு" என்றபடி
வயிற்றின் மேல் அழுத்துவாள்
மருத்துவதாதி.

பத்துமாத சுமையை
ஒற்றை நொடியில் வெளித்தள்ள
பற்களை கடித்து முக்குவாள்.

அகண்ட கால்களின் மத்தியில்
பிண்டத்தின் தலை தெரிகையில்
உயிரை பிழிந்த வலியில் கத்துவாள்.

வீறிட்டழும் சிசு,
தேடித்தேடி அவள் முலையை கவ்வுகயில்,
ஜனிப்பாள்.

ஒரு தாய்!

அன்புடன்
நான்.

11 Responses so far.

 1. Anonymous says:

  Super thought abt amma... :) :) :)

  Ramya

 2. Thanks for commenting Ramya

 3. Karthik Kumaresan says:

  very nice

 4. வருகைக்கு நன்றி திரு.சமுத்ரா,திரு.கார்த்திக்

 5. வலியின் உச்சத்திற்கு பின் பிறவிப்பலனை அடைகிறாள் தாய் .....அருமை !

 6. ஒரு பிரசவத்தில் குழந்தை பிறக்கிறது என்பதை விட ஒரு தாய் பிறக்கிறாள் என்பது தான் முதற்துவமானது,இல்லையா?

 7. Anonymous says:

  Arputhamaana thaimaiyayai pattri arumaiyana kavithaiyala superba sollirukeenga...nice...

 8. வருகைக்கு நன்றி அனானி....அடுத்த தடவை வந்தால் உங்க பேர போடுங்க plz

 9. Anonymous says:

  yen sir name potta thaan accept pannipeengala....

 10. @anonymous:appdiyellam illai..potta nalla irukkum adhukku thaan....just for count

- Copyright © துளி கடல் -