முதலில் இலங்கை தோற்றதற்கான காரணங்கள்:
-இந்த உலக கோப்பையில் எல்லாம் மட்சுகளையும் தங்கள் நாட்டிலேயே விளையாடி திடீரென்று பைனலில் புதிய condition ல விளையாடியது.
-Quater,semi எல்லாம் westindies ,newzealand போன்ற சுமாரான டீம்களுடன் விளையாடி எளிதாக ஜெயித்தது ,ஆனால் இந்தியாவோ ஆஸ்திரேலியா,பாகிஸ்தான் உடன் விளையாடி நல்ல பார்மில் இருந்தது.
-இந்தியாவுடன் நன்றாக பௌலிங் செய்யும் குலசேகரா அன்று சொதப்பி விட்டார்.
-பார்மில் இல்லாத தோனி (34 தான் அதற்க்கு முந்தைய அதிக பட்ச ஸ்கோர்) களமிறங்கியவுடன் மலிங்காவை எறியச்சொல்லி இருக்கவேண்டும்,தோனியை சில ஓவர்கள் நிற்க விட்டது பின்னால் பேராபத்தாகி விட்டது.
-பிட்சின் ஈரத்தன்மையால் முரளி,ரண்டிவ்விற்கு Grip கிடைக்காமல் சரியாக போடவில்லை.
-பார்மில் இருந்த மென்டிஸ்ஐ வெளியே எடுத்தது.

ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட டீம்,அருமையான பிளேயர்களை கொண்டது.272 ரொம்பவும் நல்ல ஸ்கோர் தான்...என்ன சொல்ல எல்லாம் தோனியின் நேரம் தான்.

இப்போ இந்தியா பற்றி:

உண்மையாகவே நாம் இந்த கோப்பைக்கு தகுதியானவர்கள் தான்.ஏனென்றால் ஒரு மேட்ச் என்றால் ஒரு மேட்ச் கூட நாம் எளிதாக வெல்லவில்லை.quarter ,semi யில் ரொம்பவும் போராடியது இந்தியா.
பைனலில் அணியின் பீல்டிங்கை போல நாம் இதுவரை பார்த்திருக்க மாட்டோம்.
அஸ்வின் ஐ ட்ரை பண்ணி இருக்கலாம் விக்கெட் எடுக்கிறாரோ இல்லையோ ரன்களை கட்டுப்படுத்தி இருப்பார்.ஸ்ரீசாந்தை எடுத்து உபயோகப்படுத்தவே இல்லை.
இலங்கையில் ஆப்-ஸ்பின்னர்கள் (ரண்டிவ்,முரளி,தில்ஷன்) இருப்பதை தெரிந்து இடது கை யுவராஜை விட ,தான் நன்றாக ஆட முடியுமென நம்பி முன்னமே இறங்கி தோனி எடுத்த ரிஸ்க் (successfull!!).
நல்ல பார்மில் இருந்த தில்ஷன்-தரங்காவை ஆடவிடாமல் செய்தது.
அவுட் ஆனா முந்தைய பந்து வரை பொறுப்புடன் ஆடிய கம்பீர்,சச்சின் சேவாக் ஆட்டமிழந்தபின் பொறுமையாக விளையாடிய கம்பீர்-கோலி.
யாருமே எதிர்பார்க்க வண்ணம் இந்த போட்டியில் மட்டும் விளையாடி புகழை சம்பாதித்துக்கொண்ட நம்ப தோனி.
சச்சின்:பைனல்ல கொஞ்சம் ஏமாற்றம் தான்.எவ்வளவு நாள் தான் டீமை நானே தூக்கிட்டு ஓடறது,வேற யாரவது பிடிங்கப்புன்னு விட்டுட்டார் போல.பயபுள்ள ஷாட் எல்லாம் எப்படி அடிக்குது ,ஏதோ ப்ரோக்ராம் பண்ண ரோபோட் மாதிரி.(தனிப்பதிவு எழுதனும் இவரபத்தி.)

சேவாக்:எப்பவும் முக்கியமான மட்சுல அடிச்சு கொடுப்பார்,இதுல பண்ணல.அவுட்னு தெரிஞ்சும் பாகிஸ்தான்,இலங்கை கூட உடனே review கேட்டது கொஞ்சம் ஓவர் தான்.இவரும் உலகத்தரமான பிளேயர் தான் ஆனா என்ன மத்த பிளேயர்கள் (like sachin,dravid,kallis,ponting)
ஒரு மாறி four அடிச்சா,இவர் வேற மாறி அடிச்சு பேர் வாங்கிட்டார்.
யுவராஜ்:உலக கோப்பைக்கு முன் டெஸ்ட்,ஒன்-டேவிலிருந்து நீக்கப்பட்டவர்,பல புகார்களுக்கு ஆளானவர்.சொல்லபோனால் இவரால் தான் உலக கோப்பை ஜெயித்தோம் எனலாம்.எல்ல போட்டிகளிலும் முக்கிய விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். நின்று ஆடவும்,அடித்து ஆடவும் செய்வார் ,எந்த சூழலிலும் நம்பக்கூடியவர்.dangerous batsman too.

கோலி,ரைனா:வருங்கால டீமின் தூண்கள் இவர்கள்.உலக கோப்பைக்கு முன் ரைனா பார்ம்-அவுட்டில் இருந்தாலும் கொடுத்த சான்ஸ்ஐ பயன்படுத்திக்கொண்டார்.அற்புதமான பீல்டர்.கோலி இருந்த பாமிர்க்கு அவர் விளையாடியது சுமார் தான்,இருந்தாலும் பைனலில் நின்று விளையாடி விட்டார்.

கம்பிர்,டோனி:டெஸ்ட்,ஒன்-டே,20-20 என அனைத்து format களிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர் கம்பிர்.பைனலில் இரண்டு விக்கட்டுகள் விழுந்த பின்பு அவர் விளையாடியது ஒரு முதிர்ந்த இன்னிங்ஸ்.பரபரப்பின்றி விளையாடக்கூடியவர்.Foot work நன்றாக இருக்கும்.
எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஆட்டக்காரர் தோனி.அவர் பாட்டிங்இல் நிறைய குறை இருக்கிறது. ஆனால் நல்ல கேப்டன் என்பதை நிறைய தடவை நிருபித்து விட்டார்.இம்முறையும் தான்.

சாகிர்,ஹர்பஜன்:சாகிர் இந்தியாவின் அருமையான ஒரே உருப்படியான ஸ்விங் பவுலர்.பைனல்ஸ் தவிர மற்ற எல்லா மேட்சுகளிலும் பாட்டிங் பவர்ப்ளே ஓவர்களை நன்றாகவே போட்டிருக்கிறார்.நம்பிக்கையான பௌலர்.இவரது தரம் உயந்து கொண்டே போகிறது.ஹர்பஜன் செமி பைனலில் எடுத்த உமர் அக்மலின் போல்ட்,மறக்கவே முடியாத டெலிவரி.ஒரு வேளை இவரது பௌலிங் பிரஷர் கொடுப்பதால் தான் யுவராஜிற்கு விக்கெட் விழுகிறதோ என்னவோ.

92 இல் படு தோல்வி,96 இல் இதே ஸ்ரீலங்காவிடம் அழுது கொண்டே வெளியேறியது,2003 பைனலில் மட்டும் கேவலமாக விளையாடி வெளியேறியது,2007 இல் முதல் ரவுண்டு கூட தேராமல்....இன்னும் பல தோல்விகள்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக பார்வையாளனாக மட்டுமின்றி கிரிகெட்டை சுவசிப்பவனாகவே இருக்கும் எனக்கு இது ஒரு மகத்தான மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள் டீம் இந்தியா!அன்புடன்
நான்.

12 Responses so far.

 1. B.MURUGAN says:

  மத்த மேட்ச் எப்படின்னு தெரியாது,இந்த மேட்ச் கண்டிப்பாக எந்த மேட்ச்பிக்சிங்கும் இல்லாமல் நிஜமான விளையாட்டு உன்னர்வோடு நடந்தது செம திரில்,

 2. @முருகன்:மேட்ச் பிக்சிங் நடக்க இப்போ எல்லாம் சான்ஸ் கம்மிங்க.....தண்டனைகள் கடுமையா ஆயிடுச்சு....பிளேயர்ஸ் எல்லாம் ரொம்ப பயந்து போயிருக்காங்க.இந்த உலக கோப்பை நேர்மையா தான் நடந்திருக்குமுன்னு நம்பறேன்.

  @சமுத்ரா:வருகைக்கு நன்றி சமுத்ரா

 3. அருமையா எழுதி இருக்கீங்க....!

 4. பாராட்டுக்களுக்கு நன்றி திரு.ராமசாமி

 5. match fix panrathe ICC apram ennanga payam....

 6. @பொழுதுபோக்கு:அப்படியா?எனக்கு இது தெரியாம போச்சே!
  எல்லாமே மேட்ச் பிக்ஸிங்னா ஒரு காட்சி சுவாரசியத்திற்காக மேட்ச் பார்க்கலாம்,
  சினிமா மாதிரி.
  உங்க ப்ளாக் பார்த்தேன்,உங்க கிட்ட ஒரு "சுப்பிரமணிய சாமி" ஜாடை தெரிகின்றது,
  வாழ்த்துக்கள்.வந்தமைக்கு நன்றி!

 7. shabi says:

  -Quater,semi எல்லாம் westindies /ENGLAND KOODA

 8. @shabi:sry, a small mistake.....

 9. srilankan says:

  always srilankan teams is the best team in the world

 10. @srilankan: nothing is "always" in this world.dont talk silly.

 11. Anonymous says:

  I want post this topic. Sorry
  olololo

- Copyright © துளி கடல் -