நமக்கான வார்த்தைகள்

விடுமுறை நாளொன்றை,
நமக்காய் மட்டும் செலவிட
சித்தம் கொண்டோம்.

பாடல் கேட்டபடி காரில் சென்றோம்
உன் தங்கையிடம் நீயும்,என் நண்பனிடம் நானும்
போனில் பேசியபடியே பூங்காவில் நடந்தோம்.
நூறாவது புடவை ஒன்றை நீயும்,
அழுக்கு நீலத்தில் எனக்கொரு ஜீன்சும் வாங்கிக்கொண்டோம்.
உயர்தர பப்பொன்றில் லேசான
போதையின் மிதப்பில் நடனமாடினோம்-தெளிந்தபின்
வயிறுமுட்ட உண்டு வீடுதிரும்பினோம்.
கட்டில் அதிரக்களித்திருந்தோம்.

இப்படி நமக்கு செலவிட்டதாய்
எண்ணிக்கொள்ளும்
எந்த நாளிலும்,
உனக்கான என் வார்த்தைகளையும்
எனக்கான உன் வார்த்தைகளையும்
நாம் பேசிக்கொண்டதே இல்லை.

அன்புடன்
நான்.

6 Responses so far.

  1. dhanya says:

    அற்புதம். இந்த கவிதை சாப்ட்வேர் கணவன் மனைவி க்கு அப்படியே பொருந்தும். அதுவும் பெங்களூர் போன்ற நகர வாசிகளுக்கு.

  2. இன்றைய உலகின் எதார்த்தம் கவிதையில் மிளிர்கிறது...

    மனம் விட்டு பேச நேரம் இருந்தும் யாரும் விலகி நிற்கவே ஆசைப்படுகிறேகம்..

    அசத்தலான கவிதை...

  3. @Dhanya:நீங்கள் சொல்வது சரிதான்..வீதிகளில் அவர்களை பார்த்தாலே தெரிந்துவிடும் அவர்களை பற்றி.

  4. @சௌந்தர் :வருகைக்கு நன்றி

- Copyright © துளி கடல் -