ஜெயகாந்தன் தனது நாவல்களில் தனக்கு ரொம்பவும் விருப்பமான நாவல் என இதை குறிப்பிட்டிருந்தார்.படிக்கும் நமக்கும் அப்படிதான்,நாவலுக்கான வழக்கமான ஏற்றஇறக்கமில்லாத,எவ்வித ஜிகினாத்தனங்களும் இல்லாத
தனித்துவமான படைப்பு.
           ஆங்கிலோ-இந்திய பின்னணியில் வாழ்ந்த ஹென்றி தந்தையின் 
பூர்வீக மலை கிராமத்துக்கு   வந்து    அம்மனிதர்களிடம்     எப்படி ஒன்றிப்போகிறான்,அதனால் அந்த கிராமம் அடையும் பாதிப்பு என்னென்ன என்பதை பற்றியதே நாவல்.ஹென்றி,களிமண்ணை போல,குழந்தையை போல,வாழ்கை அடித்துச்செல்லும் பாதையில் நீந்திப்போகிறான்.ஓடும் ஆற்றையும்,கிணற்றையும் கண்டதும் ஆடையின்றி நீந்திக்களிக்கிறான்.கூழையும்,கிழங்கையும் விரும்பி உண்கிறான்.மின்சாரத்தால் உலகம் எவ்வளவு தான் பயன்பட்டாலும் அகல் விளக்கின் வெளிச்சமே போதும் என்னும் வரிகளை கடக்கும் போது ஏதாவதொரு கிராமத்தில் நிறைய புத்தகங்கள் படித்துக்கொண்டும் ,அன்றைய தேவைகளை மட்டுமே தீர்த்துக்கொள்ள ஒரு பெட்டிக்கடை வைத்து வாழ்கையை ஓட்ட வேண்டும் என என் நினைவில் வரும் ஆசை(பேராசை!) எட்டிப்பார்க்கின்றது. இதெல்லாம் நடைமுறைக்கு சிறிதும் சாத்தியமில்லாத,சோம்பேறித்தனமான யோசனையாவும் வைத்துக்கொள்ளலாம்,ideal thought !
            முதன்முதலில் ஹென்றிக்கு அறிமுகமாகும் தேவராஜ்,அவ்வூரில்
அத்தனை காலமாக இருந்தும் தன் கண்களில் படாத  அழகையும்
வனப்பையும் ஹென்றியின் ரசிப்பாலும்,குதூகலதாலும் அறிந்து வியக்கிறான்.ஹென்றியின் ஒவ்வொரு செயலிலும் பெருதும் ஈர்க்கப்பட்டு பிரிதிருக்கும் தன் மனைவியோடு சேர்ந்துவிடுவது மனிதன் எந்த அளவுக்கு அன்பு நிறைந்தவனாகவும்,positive approch உடன் இருக்கவேண்டும்,அப்படி இருப்பதனால் எதனையும் வெல்லலாம் என்பது விளங்குகிறது.
            சொத்தின் மீதான பாகபிரிவினையின் போது ஊர் பெரியவர்கள் தீவிரமான  வாதத்தில் ஈடுபட்டிருக்கையில்,கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சிறுவர்கள்  பம்பரம் விடுவதை ரசித்துக்கொண்டிருக்கின்றான் ஹென்றி.தன் தந்தையின் ஏராளமான சொத்துக்கள் மீது அவனுக்கு எவ்வித பற்றும் இல்லை,அதை மீட்டெடுக்க அவன் வரவில்லை என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் ரொம்பவும் அழகாக விளக்கி விடுகிறார் ஜெயகாந்தன்.நம்மில்  நிறைய பேர் வாழத்தவறிய வாழ்கை அது இல்லையா?
          அத்தனை வருடமாக தன் தந்தையின் வீட்டையும் , நிலங்களையும் பாதுகாத்த  ஹென்றியின் தந்தையின் தம்பி அவனை பயத்துடனும் லேசான விரோதத்துடன் எதிர்கொள்ள,ஹென்றியோ எல்லா பொறுப்பையும் அவரிடமே விட்டுவிட்டு அவர் வீட்டுக்கே சென்று உறவாடி மகிழ்கிறான்.
    
       கதையின் இறுதியில் வரும் நிர்வாண,சித்தம் கலங்கிய பெண்ணை பற்றி கொஞ்சம் தீவிரமாக யோசிக்கையில் ஹென்றி என்ற பாத்திரத்தின் miniature ஆக அவள் இருக்கிறாள்.மொத்த கதையுடைய சாராம்சமும் அந்த பெண்ணின் வடிவாகவே இருக்கிறது.

     எனக்கு  ஜெயகாந்தனை படிப்பதில் எப்பொழுதுமே கொஞ்சம் பெருமையும்,ஆர்வமும் உண்டு ஏனெனில் எங்கள் ஊர் மொழி வழக்கில் இருக்கும் உரையாடல்கள்.உ.தா மல்லாட்டை-நிலாக்கடலை,கொறடு-தாழ்வாரம்,வேறெங்கிலும் இப்படி பேசி கேட்க முடியாது.மொத்தமாக சொல்லவேண்டுமெனில் ஜெயகாந்தனுக்காகவும்,நாவலில் சொல்லப்படும் நேர்கருத்துகளுக்காகவும்,பாத்திரங்களும்,அவற்றின் ஈர்ப்புத் தன்மைகளுக்காகவும் "ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம்" படித்து,பாதுகாக்க வேண்டியதொரு நூலாகிறது.

ஓட்டு போட்டுட்டு முடிஞ்சா கமெண்டும் போட்டுட்டு போங்க!

அன்புடன்
நான்.
     

9 Responses so far.

 1. If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

 2. இந்தப் புத்தகத்தை என் அபிமான எழுத்தாளர் ஜெயகாந்தன் புகழின் உச்சியில் இருந்த 70-80 களில் படித்தேன்.
  உங்கள் விமர்சனத்தின் 3 பந்தியில் உள்ள விடயங்கள் என்னையும் கவர்ந்து, இவ்வளவு காலமாகியும் மறக்காமல் இருக்க வைத்தவை.
  இன்று சிலரது எழுதுக்களை பலர், "நாங்கள் சூச்சாவுக்குக் கூட போகாமல் படித்தோம் அவ்வளவு விறுவிறுப்பு" என விமர்சிப்பது ஒரு வித புது மோடியாக பதிவுலகில் உலா வருகிறது.
  ஆனால் எத்தனையோ பேர் எழுத்துக்களை இப்படி ,வைக்கமனமின்றி தொடர்ந்து படித்துள்ளேன். அதில்
  இந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகமும் ஒன்று. எனக்கு நன்கு ஞாபகம் உண்டு. ஈழத்தில் என் கிராமத்து வீட்டில் அரிக்கன் லாம்பில் விடியவிடியப் படித்து முடித்தேன்.அப்போ சொந்தமாகப் புத்தகம் வாங்கும் நிலையில்லை. இரவலே!!!!
  இன்றும் எனக்கு மிகப்பிடித்த நாவல் எனும் வரிசையில் முதல் நாவல் இதுவே!
  இன்றைய இளைய தலைமுறையினர் இவற்றையும் படித்தால், "சூச்சா" போகாமல் படிப்பவற்றின் வித்துவத் தன்மை புரியும்.
  பலர் கிளுகிளுப்பை; சுகானுபவம் என்கிறார்கள்.ஜெயகாந்தனின் இந்த நாவல் ஒரு சுகானுபவம் என்பேன்.

  அந்தச் சுகானுபவத்தை நீங்களும் அனுபவித்துள்ளீர்கள்.

 3. This comment has been removed by the author.
 4. Anonymous says:

  வருகைக்கு நன்றி திரு.யோகன்,உண்மை தான் படிப்பவர்களை பரவசமூட்டும் நாவலிது.

 5. Anonymous says:

  தங்கள் படைப்புக்கு நன்றி. கதை படித்தவர்கள் மட்டுமே புரிஞ்சு கொள்ற மாறி இருக்கு உங்க விமர்சனம். இன்னும் detailed a இருந்தா கதை படிக்காதவங்களுக்கும் author ஓட எழுத்தின் ஆழம் புரியும் என்று நினைக்கறேன்.

 6. Ibrahim A says:
  This comment has been removed by the author.
 7. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி அனானி.
  நான் நாவல் சம்பந்தமான என்னோட வாசிப்பனுபவத்தை சொல்லி இருக்கேனே தவிர,புத்தகத்தை promote செய்யவில்லை.
  முழு கதையையும் எழுதுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்.

 8. arumaiyana vimarsanam. jeyakanthan always great

 9. Ibrahim A says:

  நன்றி "எனக்கு பிடித்தவை"

- Copyright © துளி கடல் -