இயக்குனர் chan wook park தென் கொரிய படங்களில் ஒரு முக்கியமான ஆளுமை.தனது oldboy யில் இருந்து sympathy for lady vengeance,sympathy for Mr.vengeance படங்கள் வரை உலகத்தின் பார்வை தன் பக்கம் இருக்குமாறு பார்த்துக்கொண்டவர்.இவர் படங்கள் உண்மைக்கு வெகு அருகாமையில் நம்மை அம்மணமாக கொண்டுபோய் நிறுத்தவல்லவை.நேரடியான வன்முறையும்,ரத்தமும் அதே நேரத்தில் தூங்க விடாமல் துரத்தும் காட்சிகளும் விரவி இருக்கும்.இசையை உப்பை போல அளவாக பயன்படுத்தி கதாபாத்திரங்களின் மற்றும் காட்சிகளின் வலிமையால்  மட்டுமே பார்வையாளனை கட்டிபோடும் தன்மையுடையது வூக் பார்கினுடைய படங்கள்.சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றை சொல்ல வேண்டுமெனில் sympathy for Mr.vengeance படத்தன் இறுதியில் நாயகன் ஆற்றில் மூழ்கி சாகும் அந்த காட்சியில் தெரியும் சத்தமில்லாத வலியிலும் அதை தொடர்ந்து வரும் நீண்ட மௌனமும் தான்.....unusually powerful .பார்க்கின் புதிய படமான thirst -2009 பற்றி இங்கே எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
       வேம்பயர்(vampire) என்பது மனித ரத்தத்தை மட்டுமே குடித்து உயிர்வாழும் மிருகம்.அன்பையும் கருணையையும் மட்டுமே போதித்து வாழும் ஒரு கிறிஸ்தவ பாதிரியார்,அப்படி ஒரு வேம்பயராக உருமாறி போவதால்,இச்சைக்கு ஆளாகி ஒரு பெண்ணை காதலிக்கிறார்,அதனால் 
பல தவறுக்கு துணை போய்,துன்பத்திற்கும் ஆளாகி மடிகிறார் என்பதே கதை.
      ஹான் என்ற பாதிரியார்,கொடிய வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும்  முயலும் அமெரி
க்க நிறுவனத்திற்கு தன்னை பரிசோதனைக்காக கொடுகிறார். 500 பேருக்கு மேல் இறந்து போன அந்த பரிசோதனையில் இவர் மட்டும் பிழைத்துக்கொள்கிறார்.ஆனால் போகப்போக பிழைத்ததின் காரணம் பெரும்பூதமாய் கிளம்புகிறது.பகலில் உடலில் கொப்புளங்கள் தோன்ற,இரவில் வேம்பயராகும் அவருக்கு ரத்தவேட்கை ஏற்படுகின்றது.தான் வேலை செய்யும் மருத்துவமனயில் பைபிளை போதித்து,நோயாளிகளுக்கு பாவ மன்னிப்பு வழங்கிய அங்கே ,இப்போது இரவில் கோமாவில் கிடக்கும் நோயாளியின் ரத்தத்தையும்,சேமிப்பில் இருக்கும் ரத்தத்தையும் குடிக்கத்தொடங்குகின்றார்.
      ஹானுக்கு அம்மருத்துவமனை
யில் சிகிச்சை பெற்று வரும் தனது பள்ளிகால நண்பன் ஷீனுடனும்,அவனது குடும்பத்துடனும் நட்பு ஏற்படுகின்றது.மனநிலை பிறழ்ந்த  ஷீனும் ,அவன் தாயும் ஷீனின் அனாதை மனைவியான தேஜு வை கொடுமை செய்கிறார்கள்.துன்பத்தில் தவிக்கும் அவள் ஒவ்வொரு இரவும் வீட்டை விட்டு ஓடுகிறாள்,விடுதலை பெற விரும்புவது போல வேகமாய் ஓடுகிறாள்,ஆனால் குளிரில் செருப்பின்றி ஓடுவதால் மொத்தமாக ஓடிபோய் விட முடியாமல் திரும்பிவிடுகிறாள், 
அவளது அடிமை வாழ்க்கையையும்,அதை விட்டு ஓடிப்போகமுடியாத அவளது இயலாமையும் பார்வையாளனுக்கு கடத்தும் அருமையான காட்சி இது.
     பின்னர் அடிக்கடி அவள் வீட்டிற்க்கு செல்லும் ஹானுக்கு அவளோடு தொடர்பு ஏற்படுகின்றது,தான் செய்வது பாவம் என்பதை உணர்தாலும் அவருக்குள் இருக்கும் மிருகம் அவரை தூண்டுகிறது.அவர்களது உறவு காமமாக,காதலாக பொங்குகையில் ஹான் ஒரு வாம்பையர் என்பதை தேஜு அறிகின்றாள்,ஆனாலும் அவரை விட்டு போகமுடியாமல் தவிக்கிறாள். தன் கணவன் தினமும் செய்யும் கொடுமைகளை கூறி அவனையும், அவனது தாயையும் கொன்று விடுமாறு ஹானை கேட்கிறாள்,அவள் படும் துன்பத்தை போக்க அவள் கணவன் ஷீனை  கொன்று விடுகிறான் ஹான், அந்த அதிர்ச்சியில் அவன் தாய் கோமாவிற்கு போய் ஒரு உயிருள்ள பிணம் போல ஆகிவிடுகின்றாள்.
     போகப்போக ஹானுடன் சேர்ந்ததால் தேஜுவும் வாம்பயராக மாறிவிடுகிறாள்,அடிமையாய் வாழ்ந்தவளுக்கு சுதந்திரமும், வலிமையும்   கிடைத்ததால் கட்டுப்பாடில்லாமல்,தன் விருப்பம் போல் இரவில் மனிதர்களை கொன்று வாழ்கிறாள்.அவள் பெற்ற அந்த வரத்திற்காக  எதையும் செய்ய துணிகிறாள்.ஹான் அவளை கட்டுப்படுத்த நினைத்து தோல்வியே தழுவுகின்றார்.
    இறுதியில் ஹான்-தேஜு முடிவு என்ன ஆனது,கோமாவில் இருக்கும் ஷீனின் தாயின் நிலை என்ன என்பதை டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.முழுக்கதையும் சொல்லிவிட்டால் படம் பார்க்க இயலாது.
   தென் கொரிய திரைப்படங்கள் மீதும்,இயக்குனர்கள் மீதும் பெருத்த ஈடுபாடு வருவதற்கு காரணம் இது போன்ற படங்கள் தான்.நேர்த்தியாக கதை சொல்லும் பாணி,ஹாலிவூட் படங்களை போல் ரொம்பவும் அலட்டிக்கொள்ளாத நடிகர்கள்,ரொம்பவும் சாதரணமான லொகேஷன், காட்சியின்  தீவிரத்தையோ, அழகையோ இசைமூலம்  அல்லாமல்  காட்சியிலேயே  வெளிப்படுத்தும்  தன்மை,இவையெல்லாம் கிட்டதட்ட  எல்லா   படங்களிலும் பொதுவானவை.
     ஹான்-தேஜுவும் இரவில் மாடிக்கு மாடி பறந்து செல்வதும்,சுவரில் தொங்குவதும் சீரியசான படத்தில் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தாலும்,அதை வாம்ப்யரின் குணமாக எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.அதுபோல ஷீனின் தாய் கோமாவிற்கு போனபின் வரும் கனவுக்காட்சிகளும் படத்தை கொஞ்சம் இழுத்து,பின் இறுதியில் பற்றிக்கொள்கிறது.
    வூக் பார்க்கின் மாஸ்டர் பீஸ் என்று இதை சொல்ல முடியாவிட்டாலும், அவரின் சிறந்த படைப்பாகவே இதை கொள்ளலாம்.
அன்புடன்
நான்

3 Responses so far.

 1. Kumaran says:

  இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று நினைக்கிறேன்.உங்கள் விமர்சனமே அதை தூண்டுகிறது.நான் கொரிய படங்களை பார்ப்பது குறைவு..வாய்ப்பு கிடைப்பின் பார்க்க முயற்சி செய்கிறேன்.அருமையான விமர்சனம்.நன்றி.

 2. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி குமரன்.கண்டிப்பாக Oldboy,chaser,i saw the devil,sympathy for Mr.vengeance,bittersweet life, memories of murder பாருங்கள்....கொரியப்படங்களுக்கு அடிமையாகி விடுவீர்கள்

 3. Anonymous says:

  Thanks for finally talking about > "தாகம்: தென்கொரிய திரைப்படம்" < Loved it!

  My web page :: domain

- Copyright © துளி கடல் -