இன்றெனக்கு பிறந்தநாள்!

ஆயிரக்கணக்கில் வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களும் வந்து குவிந்த வண்ணமாக இல்லாவிட்டாலும்,ஏதோ நெருங்கிய   நண்பர்கள் போன் செய்தார்கள்,நான் எடுக்காமல் போனதால்,மெசேஜ் அனுப்பி வாழ்த்தினார்கள்.நான் நன்றாக மட்டுமே இருக்கவேண்டுமென்று பேராசைப்படுபவர்கள்   இருப்பதாலேயே நான் இருக்கிறேன் என்று  நினைக்கிறன்.

மேனேஜர்,டைரக்டர்,கூட வேலை செய்பவர்கள்,செய்தவர்கள் பேஸ்புக் மூலமாகள் வாழ்த்தினார்கள்.நன்றிகள்.அங்கொன்றும்,இங்கொன்றுமாக கொஞ்சம் நல்ல பேர் எடுத்திருப்பதாக தெரிகின்றது.

கொஞ்சமாக,அருமையாக பிரியாணி செய்த கொடுத்த அம்மாவிற்கும்,வாழ்த்திய அப்பாவிற்கும் நன்றி.

நான் எதிர் பார்த்தது ஒரே ஒரு வாழ்த்தை தான்,ஒரே ஒரு வார்த்தை தான்,அது இன்று எனக்கு கிடைக்கவில்லை.நகரத்தின் பெரிய மால் ஒன்றில் எத்தனையோ முகங்கள்,முகங்கள் ...அதில் அந்த ஒரு முகத்தை மட்டும் தேடினேன் தேடினேன்....கிடைக்கவே இல்லை இறுதிவரை.  உயிருடன்  நடமாடும்,மனித வடிவில் இருக்கும் அனைத்திலும் இனி அதை தேடிக்கொண்டேதான் இருப்பேன்.

ஒருவேளை நான் எதாவது வாகனத்தில் அடிபட்டு கூழாகபோய்விட்டேன் என்று தவறுதலாக எண்ணிக்கொண்டிருந்தால்.....இல்லை உயிரோடு தான் இருக்கிறேன்,உயிரோடு இந்த போஸ்ட் ஐ 07/01/2012 இரவு பதினொரு மணிக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதை தெரியப்படுத்துகிறேன்.

ஆங்கிலத்தில் ஒன்றை சொல்லுவார்கள் "people see what they want  to see".

"HAPPY BIRTHDAY TO ME, நீடூடி நிறைய வலிகளுடன் வாழ்"  

அன்புடன்
நான்.

2 Responses so far.

  1. Anonymous says:

    Belated Birthday Wishes to you Ibrahim. Live Long :-)

  2. Ibrahim A says:

    யாருப்பா அது....லீவ் எல்லாம் முடிஞ்சி
    ஆபீஸ் வந்து வாழ்த்தறது? நன்றி

- Copyright © துளி கடல் -