பாடல்:எ.ஆர் ரஹ்மான் இசையில்,மே மாதம் படத்தில் வரும் "மின்னலே நீ வந்ததேனடி" 

பள்ளிபருவத்தில் விரும்பத்தொடங்கி இன்றளவும்,எவ்வளவோ  பாடல்கள் வந்து போன போதும் என்னுடைய மொபைலில் இருந்து delete செய்ய முடியாமல் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல் இது.(என் சோனி எரிக்சன் மொபைலின் மொத்த கொள்ளளவே 512 mb என்பது உபரித்தகவல்)

அருமையான மெலடி இசையும்,பாடலின் தீமும்,spb யின் தனிக்குரலும், உச்சரிப்பும் ,வைரமுத்துவின் வரிகளும்,காட்சியமைப்பும் இந்தப்பாடலை இன்றளவும் துளிர்ப்பாக வைத்துள்ளது.எனக்கு பாடல் மிகப்பிடிக்க காரணம் பாடலின் நடுவே வரும் வயலினின் நீண்ட அழுகையும் (இசை!) ,பல்லவியின் முடிவில் வரும் ஹம்மிங்கும், பாடலாசிரியரின் வரிகளும் தான்.
அதுவும்  "நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா?" என்ற வரிகளுக்காக பாடலின் ஆரம்பத்திலிருந்தே காத்திருக்கத் தொடங்கிவிடுவேன்.

ஸ்பீக்கரில் இன்றி ஹெட்செட்டில் கேட்டால் மட்டுமே பாடலின் முழு சுவையை உணர முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து.அதோடு இதை இந்த யுகம் முழுவதும் கேட்டாலும் சலிக்காது என்பதும்.


பின் குறிப்பு :எதையாவது எழுதவேண்டும் இப்போது எனக்கு.ஏனெனில் பைத்தியம் பிடிதலிலிருந்து கொஞ்சம் காப்பாற்றுவது இதுவே.

அன்புடன்  
நான்.

One Response so far.

  1. Ibrahim A says:

    வருகைக்கு நன்றி திரு.குமரன்.....உங்கள் கமென்ட்ஐ தெரியாமல் delete செய்து விட்டேன்......

- Copyright © துளி கடல் -