யானை டாக்டர் சிறுகதையின்   ஓரிடத்தில் "நான்கு வரிக்கு ஒருமுறை டாக்டரால் யானையை பற்றி பேசாமல் இருக்க முடியாது" என்று டாக்டரை பற்றி அம்மலை மக்கள் சொல்வதாக வருகின்றது.அது போலதான்  ஜெயமோகனும்  என்று நினைக்கிறன் எந்தக்கதையிலும்,அது நாவலோ,சிறுகதையோ அவரால் காட்டை பற்றி பேசாமல் இருக்க முடியாது.காட்டுக்கும் அவருக்குமான நெருக்கமும்,அறிவும்  அவரின் எல்லா கதைகளிலும் தென்படும். யானை டாக்டர் கதை உண்மையாகவே யானைகளின் மருத்துவராக வாழ்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி என்பவரை வைத்து எழுதப்பட்டதாகும்.மேலும் கதையில் அவரைபற்றி வரும் அனைத்து தகவல்களும் சேகரித்து எழுதிஇருக்கிறார் என்பதை அறிகின்றேன்.

ரொம்பவும் அழகாகவும்,எளிமையாகவும் காட்டை பற்றியும்,யானை, மற்ற மிருகங்களை பற்றிய தகவல்களையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு அறுந்துபோய் கிடைப்பதை பற்றியும் எழுதப்பட்ட சிறுகதை இது.

காட்டிற்கு புதிதாக வரும் வனத்துறை அதிகாரி அந்தச்சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அழுகிய யானைகுவியலையும்,நெளியும் புழுக்களையும் கண்டு மிரள்கிறான்.அங்கே யானைகளுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவரோடு நெருக்கம் கொள்கிறான்.மிருகங்கள் மீதும், காட்டின் மீதும் அவர் காட்டும் நேசம் அளப்பரியதாக இருக்கின்றது. செந்நாய் கூட்டத்தோடும், யானை கூட்டத்தோடும் அதன் மொழிபேசி,அதன் எண்ணவோட்டங்களை புரிந்து கொள்ளுதலும்,அதற்க்கு பதிலுரைத்தாலும், அதன் வலிக்காக கலங்கிப்போவதுமாக டாக்டர்.கே நம்மை வரிக்குவரி வியப்பில் ஆழ்த்துகிறார்.

நாட்டில் வசிப்பவன் சகமனிதனை அடிமைபடுத்துகின்றான்,அப்படி வாழவே துடிக்கின்றான்,ஏதோ ஒரு வகையில் பிறமனிதனை நாம் ஆளவே முயல்கிறோம் நமக்கு அதிகாரம் தேவைப்படுகிறது,இல்லையா?அப்படிப்பட்டவர்களால் காட்டில் வாழவே முடியாது,ஏனென்றால் காடு ஒவ்வொரு அசைவிலும்,அதன் வலிமையை நிரூபித்து நம்மை சிறியவனாகவே காட்டுகின்றது.நம்முடைய  அதிகாரத்தை காட்டி அதோடு மல்லுக்கு நிற்க முடியாது,ஏனென்றால் காடு அதன் கீழ் நம்மை வைத்துக்கொண்டிருக்கும்.

 வீசிஎறிந்த பீர் பாட்டில் யானையின் கால்களில் புகுந்து,உள்ளே சென்று,சீழ் பிடித்து,நிறைய உண்டு நிறைய நடந்து வாழும்  யானையை ஒரே இடத்தில் நகர முடியாமல்  செய்து,பட்டினியால் சாக அடிப்பது ஆறறிவு என்று சொல்லிக்கொள்ள  நம்  இனத்திற்கு தகுதி உண்டா என்ன?

    போகப்போக காட்டை பழகி, காட்டோடு நெருக்கமாகும் வனஅதிகாரி(கதை சொல்லி) யானை டாக்டரின் மூலம் காட்டின் மொழியை புரிந்துகொள்ளத்துவங்குகின்றான் ,இப்படிப்பட்ட ஒருத்தரை பற்றி உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்ற  ஆசையில் அவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு ஏற்பாடு செய்கிறான்.ஆனால் அவரோ   காட்டில் வாழ முதல் தகுதியே மனிதனாய் இல்லாமல் யானையை போல்,குரங்கை போல் அற்பத்தனம் அன்றி வாழவேண்டும் என்கிறார்.காட்டுமிருகம் ஒன்றிற்கு உன்னை புரிந்து கொள்ள முடிகின்றது என்ற மகத்தான  விஷயத்தை  விட எந்த விருதும் உயர்ந்ததல்ல என்கிறார்.(நான் ரொம்பவும் ரசித்த வரி,got  goose bumps).

    இங்கிலீஷ் பேசிக்கொண்டு,லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவன் தான் இங்கு பீர் பாட்டிலை வீசி எரிந்துவிட்டு போகின்றான்.இன்று    படித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனும் அமெரிக்கா போய்விடவேண்டும்,பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற போலி லட்சியவாதிகள் தான்.அவர்களை பார்த்து,அது தான்  வாழ்கை என்று தெரிந்து அவர்கள் பின்னால் ஓடும் பதர்கள் இன்று ஏராளம், இப்படியாகத்தான் நமது இளைய தலைமுறை சீரழிந்து கிடக்கிறது என்று ஜெயமோகன் பொட்டில் அறைந்தார் போல் சொல்கிறார்.‘Man, vain insect!’

   கார் வாங்கி விட்டேன்,இனி அடுத்ததாக பிளாட் ஒன்றை வாங்கி எனது தாய் தந்தை மனைவியை குடிவைக்கவேண்டும்  என்ற குறிக்கோளுடன் வாழும் எங்கள் உலகில் இருந்து வேறுபட்டிருக்கும் டாக்டர் . கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்  காலடி  மண்ணில் வாழும் காந்திகளே!

 
இப்படிப்பட்ட மனிதரையும் ,அவர் வாழ்கை முறையும் கொஞ்சம்  புனைவோடு கலந்து,சுவாரசியமாக  எங்களை போன்றவர்களுக்கு புரியவைத்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி!

நிஜ யானை டாக்டர்
படம் உதவி : http://elephantdoctor.com/
யானை டாக்டர் வீ.கிருஷ்ணமூர்த்தியின் தளம் :

ஜெயமோகனின் யானை டாக்டர் சிறுகதையை படிக்க:
http://www.jeyamohan.in/?p=12433


மறக்காமல் ஒட்டு போட்டு விட்டு,இந்த கட்டுரையை பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவித்து விட்டு செல்லவும்.


அன்புடன்
 நான்

- Copyright © துளி கடல் -