எனது யானை-டாக்டர்(இங்கே கிளிக்கி படிக்கவும்) கடிதத்திற்கு திரு.ஜெயமோகன் எழுதிய பதில்,

அன்புள்ள இப்ராகீம்

நன்றி
நீங்கள் நினைப்பதை சரியாக எழுதும் மொழி இருக்கிறது. தொடர்ந்து
எழுதுங்கள். எழுத்து யார் வாசிக்கிறார்களோ இல்லையோ நம்மை நம்முடைய பல தளைகளில்   இருந்து விடுவிப்பதை காண்பீர்கள். வாழ்த்துக்கள்.
காடு நமக்கு நாம் செல்லும் திசைக்கு எதிரான ஒரு அழகிய பாதையைச்
சுட்டிக்காட்டியபடியே இருக்கிறது என நான் நினைப்பதுண்டு. நண்பர்குழுவுடன்
தொடர்ச்சியாக கானுலா செல்வது அதற்காகவே
அதை உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்

ஜெ
---------------------------
திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய கடிதம் என்னை நிச்சயம் ஊக்கப்படுத்தி இருக்கின்றது.நன்றி.
தற்போதுள்ள நிலையில் பித்து பிடித்தலிலிருந்து   என்னை கொஞ்சம் காத்துக்கொண்டிருப்பது எதையாவது எழுதிக்கொண்டே  இருப்பதும், வெறி பிடித்தவனை போல படித்துக்கொண்டே இருப்பதும் தான்.எழுத்தும், படிப்பும் என்னை என்னிடமிருந்து காக்கிறது.என்ன செய்ய போகிறேன் என்று திணறும் இவ்வேளையில் என்ன செய்ய வேண்டும் என்பதை காட்டுகிறது.

ஷாப்பிங் மாலோ,சினிமா கொட்டகையோ இல்லாத ஊருக்கு கொஞ்ச நாள் சென்று லாப்டாபோ,இன்டர்நெட்ஒ,மொபைலோ கைவசம் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று எரிந்து கொண்டிருக்கும் எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற முற்படுகின்றேன்.
-----------------------------------------
மேற்கண்ட எனது கடிதத்திற்கு அவர் எழுதிய மறுகடிதம்,

 அன்புள்ள இப்ராகீம்

ஆம். உண்மை
ஒரு அந்தரங்கமான கிறுக்குத்தனம், ஒரு அந்தரங்க கனவுலகம்,
ஒவ்வொருவருக்கும் தேவை. அதுவே லௌகீகமான பல விஷயங்களில்   இருந்து ஒரு கவசம்போல  காப்பாற்றுகிறது    உங்கள் மொழி  நீங்கள்  மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறவர் என காட்டியது. ஆகவே தான்  எழுதினேன். தொடர்ந்து எழுதுங்கள்.


ஜெ
-----------------------------------

அன்புடன்
நான்.

2 Responses so far.

  1. Ibrahim A says:

    வருகைக்கு நன்றி திரு.குமரன்

- Copyright © துளி கடல் -