Archive for March 2012

எனக்கு குழந்தைகள் பிடிக்கும்

குழந்தைகள்  யாவரும் ஒரு விசித்திரமான கண்ணாடியை போன்றவர்கள்....நம்முள் எங்கோ ஒளிந்திருக்கும் கேலியை,கிறுக்கு தனத்தை எடுத்து நமக்கே காட்டுவார்கள்.

குழந்தைகளிடம் பல முகங்கள்,குரல்கள் காட்டி பெரியவர் விளையாடும் காட்சியை கவனித்திருக்கிறீர்களா?நேரப்போக்கில் பெரியவர்கள் குழந்தையை போல் மாறி விடுபவர்களாகவும்,குழந்தைகள் அவர்களை தீவிரமான முகத்துடன் உற்று  நோக்கும் பெரியவர்கள் போலே மாறி விடுவதை காணலாம்.

வயிற்றிலிருக்கும் சிசுவை தொடாமலே அதன் ஸ்பரிசத்தையும்,நுகராமலே அதன் வாசனையும் ,பார்க்காமலே அதன் அழகையும் ஒரு தாய் உணர்கிறாள்.
அந்த சதை பிண்டத்தின் மேல் அளவுகடந்த கருணையையும் காதலையும் வளர்த்துக்கொள்ளகிறாள் இல்லையா ? அந்த சிசுவின் மொத்த வாழ்கையையும் அந்த பத்து மாதத்தில் எத்தனையோ முறை ஓட்டி  பார்க்கிறாள் இல்லையா? 

 ஒரு பச்சிளம் குழந்தையை எப்போதாவது குளிப்பாட்டி இருகின்றீர்களா?உற்சாக மிகுதியில் அது கையை,காலை குலுக்கி நம் மீது தண்ணீர் வாரி இறைப்பதையும்,முகத்தை தொடுகையில் திமிருவதையும்......குழந்தையை குளிப்பாட்டுவது ஒரு கலை.
மேலும் அப்போது குளித்த குழந்தையின்  அந்த சோப்பு வாசனையும்,அதன் மேனியில் ஓடிக்கொண்டிருக்கும் லேசான கதகதப்பும் நம்மை எப்படி ஒரு நிலைக்கு கொண்டு செல்லும்!

உடம்பு நிறைய பௌடரை அப்பிக்கொண்டு,தங்க இழைகள் போன்று முடிகள் பறக்க,லேசான பிஞ்சுக்குறட்டையுடன் தூங்கும் சிசுவை கண்டு பொறாமை கொள்ளாதவர்கள் இருக்க முடியுமா? அது தாயாகவே இருப்பினும்.

குழந்தை நடக்கத்தொடங்கி,ஓடத்தொடங்கி அதற்க்கு விளையாட்டு புத்தி வருகையில்-தாய்க்கும் அதற்கு கொஞ்சம் இடைவெளி விழுகின்றது.தாயை விட்டு பிரிந்து பொம்மையோடு குழந்தைக்கு  ஈடுபாடு வரதொடங்குகின்றது. எந்ததாயும் லேசாக கலங்கிப்போகும் காலகட்டமது.மடியிலேயே சுற்றி விளையாடிய குழந்தை கீழிறங்கி ஓடத்தொடங்கியதால் வரும் ஏக்கம்.குழந்தையின் அந்த ஓட்டம் அதன் வாழ்கை முடியும் வரை இருந்து கொண்டே இருக்கும்,அதன் பின்னே அந்த தாய் நிற்காமல் ஓடிகொண்டே இருப்பாள்.அது தாயாக இருப்பதின் சாபம்.அதற்கு தான் சுதந்திரம், நட்பு, தனிமை,காதல்,காமம் போன்ற எத்தனை எத்தனை காரணிகள் அவர்களுக்கிடையில்.

குழந்தைகளை  பற்றி எழுத நினைக்கையில்,பழைய போட்டோக்களை  புரட்டும் போது ஏற்படும் உற்சாகமும்,குறுகுறுப்பும் எழுகின்றது.இன்னும் எழுதலாம்,இன்னும் எழுதலாம் என ஊற்றாக சிந்தனை ஊறிக்கொண்டே இருக்கின்றது.அது மட்டும் இன்றி சிறு வயதிலிருந்தே எங்கு ஒரு,எந்த ஒரு குழந்தையையும் உற்று நோக்கி ரசிக்க தொடங்கினேன்.அதன் செயலும்,அழகும் என்னை எப்போதும் அதிசயப்பட செய்திருக்கிறது.
பஸ்சிலோ,டிரைனிலோ நிற்கும் தாய்,தந்தையிடமிருந்து அவர்கள் குழந்தையை வாங்கி என மடியில் இருத்திக்கொள்வதில் அவ்வளவு உற்சாகம் எனக்கு,அதனோடு பேசி விளையாடி,அது இறங்கிப்போகையில் பிரிவுத்துயரே வந்துவிடும்.   இன்றளவும் ஒரு குழந்தையை தூங்க வைப்பதிலேயும்,குளிக்க வைப்பதிலேயும்,புது வார்த்தைகள் கற்றுதருவதிலும்,வேடிக்கை காட்டுவதிலும் அலாதி பிரியம் எனக்கு.

குழந்தைகளோடு சேர்ந்திருக்கும் போதும் நம் சிறு வயது ஏக்கங்களும்,ஆசைகளும் பூர்த்தியாவது போல் இருகின்றது மேலும் நமது நிகழ் காலத்தின் துயரங்களும்,வலிகளையும் கொஞ்சம் மறந்து அவர்கள் நிழலில் இளைப்பாராவும் முடிகின்றது இல்லையா?

பின் குறிப்பு:இவையெல்லாம் அனுபவத்தில் எழுதியவை அல்ல. அனுபவம் வேண்டுமென்ற என்ற ஏக்கத்தில் எழுதியவை.

(இன்னும் வரும்)

அன்புடன்
நான்.

உதவி வேண்டுமா?


 http://www.snowstrust.org/ (தற்சமயம் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது)

தொடர்புக்கு:9865778748 அல்லது 9663001111

2003ம் ஆண்டு கல்லூரியில் எங்களுக்கு நெருங்கிய சீனியர்களுடன்  சேர்ந்து ஒரு சேவை நிறுவனத்தை துவங்கி பிற்காலத்தில் (அதாவது சம்பாதிக்க தொடங்கும் காலத்தில்) ஏழைகளுக்கும்,இயலாதவர்க்கும்,படிப்பு,மருத்துவ உதவி வேண்டுவோருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்போடு "SNOWS TRUST" ஐ துவக்கினோம்.கல்லூரி வாழ்கையிலேயே அதை பற்றி நிறைய பேசி,திட்டங்கள் வகுத்து....அதாவது வெளியே வந்தவுடன் வேலை கிடைத்துவிடும் என்ற முழு குருட்டு நம்பிக்கையில்,வரும் சம்பளத்தில் 5 % ட்ரஸ்ட்டிற்கு கொடுத்து அதை கொழுக்கவைக்கலாம் என்ற நம்பிக்கையில்.

 ஆனால்   வேலை கிடைத்து கையில் கொஞ்சம் பணம் நிற்கத்துவங்குகையில் எல்லோரும் விழித்துக்கொண்டோம்.இதில் முழு மூச்சாக இறங்குவதென உறுதி கொண்டோம்.எங்களுடைய பணத்தை போட்டு அவ்வப்போது சேர்ந்த தொகையை  வைத்துக்கொண்டு அவ்வப்போதே,அங்கங்கே உதவி செய்து வந்த நாங்கள் இப்போது இந்த சேவையை பாதை வகுத்து நேர்முகப்படுத்துவதில்  வெற்றி கண்டிருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்.

டிரஸ்ட்ஐ சென்னையில் உள்ள ஆடிட்டரை நியமித்து அரசாங்கத்தில் பதிவு செய்து கொண்டோம்.அதன் மூலம் தனி வங்கிக்கணக்கு பெற்று, வருமானவரி விதிக்கு உட்பட்டதாக ஆகிவிட்டது.இதுவரை  எங்கள் வருமானத்தில் இருந்து ஒரு தொகையை கொடுத்து வந்த நாங்கள் இப்போது வெளியில் இருந்தும் பணத்தை பெறத்தொடங்கியிருக்கிறோம்.
புதிதாக ஒரு வெப்சைட் தொடங்கி எங்களுடைய mission - vision , தொடர்பு, மெம்பர்கள்,சேவை,படங்கள்  முதலியவைகளையும் அப்டேட் செய்து விட்டோம்.trust தொடர்புடைய எல்ல விபரங்களையும் http://www.snowstrust.org/ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த சேவை மையம் படிப்பு,மருத்துவ உதவி செய்யவும்,இயலாதவர்க்கு உதவ வேண்டுமென்ற எண்ணத்தினால் தொடங்கப்பட்டது.இன்றளவும் எத்தனையோ பேர்களுக்கு உதவி செய்து வந்துள்ளது.இனியும் செய்யும்.
உங்களில் யாருக்கேனும் உதவி தேவைபட்டால் அல்லது உங்கள் குடும்பத்தினர்,நண்பர்கள்,அருகிலுள்ள அனாதை ஆசிரமம்,வயோதிகர் இல்லம் போன்றவைகளுக்கு உதவி தேவைப்பட்டால் அல்லது நீங்கள் எங்கள் சேவைக்கு உதவித்தொகை ஏதேனும் கொடுக்க விரும்பினால் எங்களை கீழ்கண்ட வெப்சைட்டின் மூலம் அல்லது கொடுத்திருக்கும் மொபைல் நம்பர் மூலம் அணுகுங்கள்.

எங்கள் SNOWS TRUST முக்கியஸ்தர்களின் பரிசீலனைக்கு பின் (நாங்கள் விரும்பினால்,எங்களான் முடிந்தால்) உங்களை தொடர்பு  கொள்வோம்.
சென்னையை மையமாக கொண்டு விளங்கும் இந்த SNOWS TRUST சேவை மையத்தை பற்றி உங்கள் நண்பர்களிடம்,குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.

http://www.snowstrust.org/ (தற்சமயம் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது)

தொடர்புக்கு: 9865778748 அல்லது 9663001111

அன்புடன்     
நான்

- Copyright © துளி கடல் -