கல்தோன்றி,மண் தோன்றுவதற்கு முன் தோன்றிய தமிழ் சினிமாவின் அபத்தங்களை  வரிசை படுத்தினால் அது நீண்டு கொண்டே போகும்.எவ்வளவு தான் டெக்னாலஜி முன்னேறினாலும் இந்த க்ளிஷேக்கள் குறையவே இல்லை,புதுசு புதுசாக மாறிக்கொண்டே இருக்கின்றது.

1.கிராமத்து கதைகளில், ஹீரோவை மேலாடை விலகிய படியே சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் கிக்கான அத்தை/மாமன் மகள் ஒருத்தி இருப்பாள்.ஹீரோ அவளிடம் கொஞ்சி விளையாடி கழித்து விட்டு பின் புதிதாக அந்த ஊருக்கு ஹை-ஹீல்ஸ், மிடியுடன்  வந்திறங்கும் வில்லனின் தங்கையே காதலிப்பார்.அதுவும் அவளுடன் முதலில் சண்டையிட்டு,அவள் திமிரை அடக்கி,புடவை கட்ட வைத்து.......இறுதியாக கேணச்சிறுக்கியான அத்தை மகள் ஹீரோவை காப்பாற்ற குண்டடி பட்டு சாக,நாயகன் நாயகி கை கோர்த்துக்கொள்வார்கள்.

2.நம் ஹீரோயின்கள் ஹீரோவுடன் கட்டிபுரண்டு,பாடல் காட்சிகளில் காட்டக்கூடாததை எல்லாம் ஒளிவு மறைவின்றி (பின்னணியில் ஆடுபவர்களுக்கு கூட சேர்த்து) காட்டிவிடுவார்கள்.ஆனால் வில்லனோ அல்லது எதாவது ரவுடியோ மேலாடையை தொட்டு விட்டால் கூட போதும்....கத்தி ஊரை கூடி.... .யப்பா அநியாத்திற்கு சீன் போடுவார்கள்.

3.குண்டடியோ,கத்திகுத்தோ ஹீரோவின் அம்மாவிற்கோ,தோழனுக்கோ நிகழ்ந்து விட்டால்.ஹீரோ அவர்கள் அருகில் வரும் வரை உயிர் போகாது, அது எத்தனை நாளானாலும் சரி. பின்னர் கதாநாயகனின்
கண்கள் சிவக்கும் படி,தலை சிலுப்பும்படி எதாவது சொல்லி மண்டையை போடுவார்கள்.

4.கதாநாயகன் டுடோரியல் காலேஜ் மாணவனாக இருந்தாலும் சரியே,கதாநாயகியின் அதிகாரவர்க்க தந்தையுடன் மல்லுக்கு நிக்கும்  போது "டேய்..நான் ஒரு குரல் கொடுத்த போதும்,மொத்த ஸ்டூடண்ட்ஸ் படையே என் பின்னால நிக்கும்" என்று சவடால் விடுவது.
(ஏன்டா நீ _____ கொழுப்பெடுத்து காதலிச்சா அது உன் வீட்டு பிரச்சனை, இதுக்கு ஏன்டா படிக்கிற பசங்களை இழுக்கரிங்க!)

5.ஹீரோ  வாடகை சைக்கிள் கடை வைத்திருந்தாலும் சரி,அவரை பற்றி பேசும் எவனாவது சொல்லும் டயலாக் " அவரு மேல கையா வச்சீங்கன்னா,தமிழ் நாடே பத்தி எறியும்"
(தமிழ் நாடு என்ன சோளக்கொல்லை பொம்மையாடா ?...... இந்த டயலாக் கேட்டா எனக்கு பத்திகிட்டு வரும்....) ஷங்கர் படத்தில் கண்டிப்பாக வரும் இது.

6.நமது கதாநாயகன்கள்-
இரும்பு ராடல் அடித்தால் கூட அசர மாட்டார்கள்,அம்மாவிடம் அடங்கி போவார்கள், 
குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடுவார்கள் (நாயகி அதை பார்த்து மெய்மறந்து நிற்பார்),
யாரையும்,ஏன் முதல் மந்திரியை கூட அவர்கள் நினைத்தால் உடனே சந்திப்பார்கள்,
அவர்களுக்கு நகரின் எல்லா வழிகளும்,எல்லா இடங்களும் உள்ளங்கை  நெல்லிக்கனி.
டூயட் பாட ஹீரோயினுடன் தனியாகத்தான் போவார்,நூறு அடியாட்களை அடிக்கவும் தனியாகத்தான் போவார்.
எவ்வளவு பெரிய வில்லனிடம் இருந்தும் அவரால் அரை நொடியில் துப்பாக்கியை பறித்து விட முடியும்.
ஆனால் எவ்வளவு துப்பாக்கி கிடைத்தாலும் அதை தூக்கிபோட்டுவிட்டு கை,கால்களால் தான் சண்டையிடுவார்.

7.பன்ச் பேசி ஹீரோ சாகடிப்பது போதாதென்று இயக்குனர் வேறு நடுநடுவே வந்து பேசிவிட்டு அல்லது ஆடிவிட்டு செல்வார்.அப்படி செய்தால் அந்த மூஞ்சியை நாம் விரைவில் கதாநாயகனாக பார்த்து,சகிக்க தயாராக வேண்டுமென்று அர்த்தம்.

8.ஹீரோ சிக்ஸ் பேக் டெவலாப் செய்தால் போதும்,படம் நெடுக்க ஹீரோயினை விட அதிகமாக சட்டையை கழற்றி உடம்பை காட்டிக்கொண்டே இருப்பார்.வர வர சிக்ஸ் பேக் மோகத்தால் ப்ராயிலர் கோழி போல் உடம்பிருக்கும் ஹீரோக்கள்  கூட சட்டையை கழட்டற  ஆரம்பித்து விட்டார்கள்...சை.

9.படத்தின் முதல் பாதி வரை நமது ஹீரோயின்கள் மாடர்ன் டிரஸ்களில் கவர்ச்சிக்குண்டாக  வலம் வருவார்கள்.பின் பாதியில் முழுக்க முழுக்க போர்த்திக்கொண்டு புடவை,நெற்றி வகிடில் கும்குமம் சகிதமாக ஹீரோவின் அம்மா பின்னால் நிற்பார்கள்(அடக்க ஒடுக்கமாம்!) .சில படங்களில், கிளைமாக்ஸ் காட்சிகளில் புடவையுடன் அவர்கள் சண்டை போடுவதையும் காணலாம்.

10.வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால்,அந்த நாட்டின் பிரதானமானவற்றையே சுற்றி சுற்றி படமெடுத்து நம்மை வெறுக்க வைப்பது.உதாரணம் ,பில்லா படத்தில் கிட்ட தட்ட எல்லா காட்சிகளிலும் தெரியும் மலேசியாவின் ட்வின் டவர்ஸ்.

இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று,

11.முதலிரவு காட்சிகளில் நாயகன் நாயகியை தொட்டவுடன் அவர் வெக்கிச்சாய்வார்.பின்னர் நாயகனும் சாய்வார்,அப்போது விளக்கு அணைக்கப்படும்(அப்போ ரூம்குள்ள இருந்து லைட் ஆப் பண்றது யாருப்பா), பின்னர் திடீரென்று புல்லாங்குழல் இசையுடன் விடிந்து சூரியனை காட்டுவார்கள்.நாயகன் மேல் சட்டையின் இரண்டு பட்டன் மட்டும் திறந்திருக்க தூங்குவார்,நாயகி நெற்றிப்பொட்டு கலைந்திருக்க, உதிர்ந்த மல்லிகை சரத்துடன்...இதுக்கு பேரு முதலிரவு காட்சியா? ( இப்படி நீங்க பண்றதாலதான் நாங்க இங்கிலீஷ் படத்த பார்க்க ஆரம்பிச்சோம்).

12.சில சமயம் முதலிரவு காட்சியில் நாயகன்-நாயகியை தொட்ட பின் நேராக வெளிநாட்டிற்கு சென்று டூயட் பாடுவார்கள்.ஏன்டா பாட்டு பாடற நேரமாடா அது ? அந்த நேரத்துல அங்கேயெல்லாம் ஏன்டா போறீங்க?குறிப்பு:இந்த தலைப்பில் இன்னும் நிறைய எழுதலாம் போலேயே.......பொறவு பார்ப்போம்.

அன்புடன் 
நான்

13 Responses so far.

 1. Unknown says:

  Super. please write like this. Excellent

 2. Kumaran says:

  சார்..விழுவாத குறையா சிரிச்சேன்..அடைப்பு குறையில எல்லாவற்றையும் அசத்திட்டீங்க..இன்னும் எழுதுங்க..சிரிக்க நான் ரெடி..நன்றி..
  காலகாலமா தமிழ் சினிமாவுக்குனு எதுக்கு தனியா காமெடி காட்சிகள்..இவங்க எடுக்குற பாதி காட்சிகளுக்கு மேல் எல்லாமே நகைச்சுவைதானே..

 3. Ibrahim A says:

  @unknown-sure thing.Thanks for visiting

 4. Ibrahim A says:

  @குமரன் -வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி,இது போன்றவைகளை எழுதி ஒரு பெரிய சைஸ் புக் ஆகவே போடமுடியும்.அவ்வளவு இருக்கிறது நம் தமிழ் சினிமாவில்....உலக சினிமாவிலும் இது போன்ற பல இருக்கின்றது.

 5. ஹி ஹி சூப்பர் பதிவு நண்பா.. முதல் போட்டோ கலக்கல்..

 6. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி ஹாரி பாட்டர்

 7. bandhu says:

  நீங்க போட்டிருக்கற கடைசி போட்டோ ரஜினியின் ஊர்க்காவலன் ன்னு நினைக்கிறேன். இதிலே ரஜினி ஒரு காலில் கயிறு கட்டி அதன் மறு முனை மாருதி ஜிப்சியில் கட்டி இருக்கும். வில்லனால் அந்த வண்டியை அங்கிருந்து ஒட்டிப்போக முடியாது. ஹீரோவுக்கு அவ்வளவு பலமாம்! கொடுமை!

 8. Ibrahim A says:

  @bandhu-இதெல்லாம் தான் நமக்கு பழக்கம் ஆகி போச்சுங்களே!.இப்படிப்பட்டவைகளை கொண்டுவந்தது நம்ம புரட்சி தலைவர் மற்றும் நம்ம சூப்பர் ஸ்டாரும் தான் இல்லையா?

 9. இதுலாம் இல்லாம ஒரு தமிழ்ப் படம் வந்தா அத மொக்கனு சொல்றானுங்க..

  ஒரே குஷ்டமப்பா....

 10. Ibrahim A says:

  இப்போ எல்லாம் ரசிகருங்க ரசனை கொஞ்சம் வளர்ந்திருகுங்க! வருகைக்கு நன்றி ஷெரிப்.

- Copyright © துளி கடல் -