The Cabin in the Woods (2011) - நவீன ஹாரர் படம்
கல்லூரியில் படிக்கும் நான்கைந்து பையன்கள்,பெண்கள் விடுமுறை நாளை ஜாலியாக கழிக்க காட்டுக்கு நடுவில் இருக்கும் வீட்டிற்கு  செல்கிறார்கள்,அங்கே அழகான ஏரியின் அருகில் ஜோடி ஜோடியாக குளிக்கிறார்கள்,இரவில் சுற்றி அமர்ந்து பாட்டு பாடிக்கொண்டே பீர் அடிக்கிறார்கள்,அவ்வீட்டில் இருக்கும் ரகசிய கிடங்கிற்கு போய் எதைஎதையோ உருட்டுகிறார்கள்,பின்னர் காட்டுக்குள் இருந்து பேயோ, ஜாம்பியோ என்ன எழவோ வந்து ஒவ்வொருத்தராக கொல்கிறது......நிற்க! இதை தானே Evil Dead,Friday the 13th காலத்திலிருந்து ஆயிரக்கணகான ஹாலிவூட் படங்களில் பார்த்து வருகிறோம்? சாவதற்கென்றே ஒரு கூட்டம், காட்டுக்குள்  சென்று  ரொமான்ஸ்  பண்ணிகொண்டிருக்கும்  போதே வித விதமாக குத்தி,கிழித்து எறியப்படுவதை தானே பல காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்...இந்தப் படத்தில் மட்டும் அப்படி என்ன புதுமை?


மேல சொன்ன கேள்விகள் தான் இயக்குனருக்கும் வந்திருக்கும் என நினைக்கிறன், "you think you know the story" என்ற Tag லைனுடன், "எங்கப்பன்  குதிருக்குள் இல்லை" என்று படத்தை தொடங்கிவிட்டார்..இதுவரை வந்த "கேபின்" படங்களிலிருந்து முற்றிலும் வித்யாசமாக படம் எடுக்க போகிறேன்  என களத்தில் இறங்கிவிட்டார்.பேய்,மிருகம்,கொலை,ரத்தம் இவைகளுடன் சேர்த்து கிராபிக்ஸ் பூவையும் நம் காதில் சரம் சரமாக சுற்றுகிறார்.மருந்துக்கு கூட லாஜிக் என்ற வஸ்து இல்லாமல் ஒரு சுமாரான ஹொரர் படம்.

கதை இதுதான்: உலகத்தை அழிக்க ஏதோ ஒரு பெரிய சைஸ் மிருகக்கடவுள் வெயிட் பண்ணிக்கொண்டிருகிறது.அந்தகடவுளை சாந்தப்படுத்த அரசாங்கம் உலகின் பல நாடுகளிலிருந்து காலங்காலமாக மனிதர்களை பலி கொடுக்கிறார்கள்,அதுவும் எப்படி? அவர்கள் பயந்து,ஓடி ஒளிந்து ,உயிருக்கு போராடி,கொடூரமாய் சாகவேண்டுமாம், அவர்களுடைய ரத்தம் தான் அந்த கடவுளை சாந்தப்படுத்துமாம்.இதனால் எல்லா நாடுகளிலும் பேய்களை பிடித்து அடைத்து,பின் அவைகளை மேற்கண்ட சிச்சுவேஷனில் வெளியே விட்டு அப்பாவிகளை கொல்வார்களாம்! இப்படி செய்யப்படும் முயற்சிகளெல்லாம் எல்லா நாடுகளிலும் தோல்வியடைந்து விட அமெரிக்காவில் இதை அதி நவீன தொழில்நுட்பத்துடன் முயல்கிறார்கள்.(ங்கொய்யால......இவனுங்களை கேட்க ஆளே இல்லையா?)


அந்த கேபினுக்குள்ளும்,அதனை சுற்றி நடப்பவைகளும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவை.அந்த வீட்டின் நிலவறைக்கு போகும் பையன்கள் விளையாட்டாக ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து படித்து விட, பூமியிலிருந்து  பேய்கள் எழுந்து ஒவ்வொருத்தராக கொல்ல தொடங்குகின்றது, அதிலிருந்து தப்பிக்கும் ஒரு பெண்ணும் பையனும் மட்டும் எப்படியோ இவைகளை கண்ட்ரோல் செய்யும் இடத்திற்கே சென்று விடுகின்றனர்.அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மிருகங்கள்,பேய்கள்,ஜாம்பிகள், அனகோண்டா, மம்மிகள், வேம்பயர்கள்.... இது வரை நாம் ஹாலிவூட் ஹாரர் படங்களில் பார்த்த அத்தனை ஜந்துக்களும் வெளியே விடப்பட்டு அந்த அரசாங்க கம்பெனி ஊழியர்கள் அனைவரும் ரத்தச்சகதியில் கொல்லப்படுகின்றனர்.
இறுதியில் உலகம் அழிந்ததா?மிருகக்கடவுள்கள் சாந்தமடைந்தார்களா என்பதை தைரியமிருந்தால் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப்படத்துக்கு IMDB யில் 7.3 ரேடிங் வேற...சை.

இந்த ட்ரெய்லரை பார்த்து தான் ஏமாந்தேன்!


பின் குறிப்பு: ஏன் ஹாலிவூட்காரங்கன்னா என்ன கொம்பா  முளைச்சிருக்கு? அவங்கள கலாய்க்க கூடாதா என்ன?

அன்புடன்
நான்.

6 Responses so far.

 1. Madhav says:

  // ஏன் ஹாலிவூட்காரங்கன்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு? அவங்கள கலாய்க்க கூடாதா என்ன? //

  கலைக்ககூடாதுன்னு யாராவது சொன்னாங்களா என்ன ? எதுக்கு இந்த டிஸ்கி ? கலாய்ங்க , ஜமாய்ங்க , கலக்குங்க ...

 2. Ibrahim A says:

  நன்றி மாதவ் .......தொடர்ந்து கலாய்போம்!!!!

 3. @@ (ங்கொய்யால......இவனுங்களை கேட்க ஆளே இல்லையா?) @@
  இருகாங்க பாஸ்..கால காலமா சொல்லிட்டுதான் இருக்காங்க போல..ஆனா கேட்க மாட்டேனு சொன்னதையே சொல்லறதுல இவர்கள் வல்லவர்கள்
  விமர்சனம் சூப்பருங்க..தொடருங்கள்..நன்றி.

 4. Ibrahim A says:

  இந்தப்படம் ஓவர் பூசுற்றல்.... வருகைக்கு நன்றி திரு.தவ குமரன்

 5. இந்தக் கொடுமைய நானும் கொஞ்ச நாளைக்கு முன்னால பாத்துத் தொலைச்சிட்டேன்...
  Lion Gates படம்னு நம்பி download பண்ணேன்... சொதப்பிட்டானுங்க...

 6. Ibrahim A says:

  ரொம்ப வித்யாசமா எடுக்கறதா நினைச்சிக்கிட்டு.....எடுத்த ஓவர் சொதப்பல் படம் வருகைக்கு நன்றி மலரின் நினைவுகள்

- Copyright © துளி கடல் -