எவன் இறைவன்

கோயில் வாசற்படியில்,

சிரங்கை சொறிந்தபடி யிருந்த 
கிழிசலுடைப்பிச்சைக்காரன்-என்னிடம்
"அய்யா" என்றபடி
எச்சில் பாத்திர மேந்தினான்

சில்லறை இல்லையென
பொய் சொல்லி-உள்ளே
நடந்தேன்.

உள்ளே
சந்நிதானத்தில்,
பிரகாரத்தில்,

எங்கு தேடியும்,
இருக்க வேயில்லை
கடவுள்.

அன்புடன்
நான்.

4 Responses so far.

  1. நிச்சயம் பிச்சைகாரணாய் இருக்க மாட்டார்,மனம் திருந்தியவராய் ருந்திருப்பார்.கவிதை நன்று

  2. Ibrahim A says:

    வருகைக்கு நன்றி திரு.கண்ணதாசன்

  3. Anonymous says:

    ellarum itha nenachaley pothum naatla kastam koranjadumla...thiruppathi undiyal free ahidum...romba nalla kavithai...superb...

  4. Ibrahim A says:

    varugaikku nandri anaani

- Copyright © துளி கடல் -