பணம் சேர்த்து சேர்த்து வைப்பதில் எப்போதும் நாட்டம் இருந்ததில்லை,அது போல அடுத்தவர் பணமாக இருந்தால், ஏன் மனைவியின் வழி வந்த நகை,பணமாகவே இருந்தாலும் அதை எனக்காக உபயோகம் செய்து கொள்ள விரும்பியதில்லை.எதுவும்,யாரிடமும் வாங்கிக்கொண்டதுமில்லை (அது அரை கோடிக்கு மேல் செலவு செய்து வீடு கட்டிக்கொண்ட போதும் கூட) பணத்தின் மீதான என் மதிப்பு அவ்வளவே.அது வருவதை பற்றியும் அலட்டிக்கொள்வதில்லை,போவதை பற்றியும் கவலை கொள்வதில்லை.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு பதிவு எழுதியாக வேண்டியிருக்கிறது.இப்படி எழுதுவதாலோ அல்லது சைட்டின் ஓரத்தில் விளம்பரம் செய்வதாலோ ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா என்றால் இருக்கிறது.முன்பெல்லாம் ரொம்பத்தீவிரமாக இல்லையென்றாலும்  ஏதோ முடிந்த அளவிற்கு பண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் சமீபகாலமாக என்னை என்னிடமிருந்தே காத்துக்கொள்ள ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம்,அந்த "ஏதாவதில்" உருப்படியான ஒன்றே ஒன்று தான் இந்த "உதவி வேண்டுமா?"
கடந்த ஒருவருடத்தில் கீழ்கண்ட சில உதவிகளை செய்து வந்திருக்கிறேன்,
1.திருச்சிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து இன்ஜினியரிங் படிக்கும் ஒரு ஒரு பெண்.தந்தை இல்லை,ஏதோ ஒரு கூலிவேலை செய்து குடும்பத்தின் வயிற்றை கழுவும் தாய் இத்துடன் அந்தப்பெண் கால்களை இழந்து நடக்க முடியாதது,மிகக்கொடுமையான வறுமை.சென்ற வருடத்தின் நடுவில் என்னை தொடர்பு கொண்டு தன் நிலையை விளக்கி பின்னர் தன்னுடைய எல்லா சர்டிபிகேடின் நகல்களையும்,அரசு கொடுக்கும் மாற்று திறனாளிகளுக்கான ஐடி கார்டும்,கல்லூரி கட்டணம்,கடந்த செமஸ்டர்களின் மார்க் ஷீட் எல்லாவற்றையும் அனுப்பி அதை சரி பார்த்து,கல்லூரியில் விசாரித்த பின்னர் என்னால் முடிந்த தொகையை அனுப்பி வைத்தேன். இங்கே இன்னொரு விஷயத்தை சொல்கிறேன்,
அப்போது வீடு கட்டிக்கொண்டிருந்ததால் பணநெருக்கடியில் கொஞ்சம் இருந்தேன்.ஆனால் இந்தப்பெண்ணுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் விட்டகலாது இருந்தது. முதல் முறையாக யாரோ ஒரு ஊர் பேர் தெரியாத பெண்ணுக்காக அலுவலகத்தில் கையேந்தினேன்,எனக்கு தெரிந்தவர்களை எல்லாம் கூட்டி பொறுமையாக எல்லாவற்றையும் விளக்கினேன் முதலில் வந்த விமர்சனம் என்ன தெரியுமா? "இப்படி கேட்கிறவர்கள் எல்லாம் நிச்சயம் ப்ராடாக தான் இருப்பார்கள்..நீங்களும் ஏமாறாதீர்கள்" என்று கலைந்து  சென்று விட்டனர்.அடப்பாவிங்களா,இவர்கள் ஒரு முறை அருகில் இருக்கும் உணவு மாளிகைக்கு சென்றார்களேயானால் குறைந்த பட்சம் மூவாயிரத்திற்கு தின்பார்கள்.அதுவும் எவனாவது ட்ரீட் என்று சொல்லிவிட்டால் போதும் ஏதோ சிறுவயதில் இருந்து அவனை எடுத்து வளர்த்தது போல அன்று மட்டும் அவனிடம் குழைந்து பேசுவார்கள்.(இந்த எழவிற்கு தான் ஏற்கனவே இருக்கும் நாலைந்து நண்பர்களை தவிர வேறு யாரிடமும் பேச்சு வைத்துக்கொள்வதே இல்லை)  ஜெயிலில் இருப்பவர்கள், திருடர்கள், கற்பழிப்பவர்கள், கொலைகாரர்கள் இவர்களையெல்லாம் விட பெரிய அயோக்கியர்கள் கோட்டிலும்,சூட்டிலும் இங்கே  திரிகிறார்கள். நான் கருணை பிரபுவோ அல்லது கருணை சிவாஜியோ அல்ல ,ஆனால் கலங்கும் மனம் இருக்கிறது.
வீடு வேலை முடிந்து ,இப்போது கொஞ்சம் பணம் இருப்பதால் மீண்டும் இந்த செமஸ்டருக்கு பணம் அனுப்பினேன்,அத்துடன் ரிசல்டை அனுப்புமாறும் கேட்டுக்கொண்டேன்...ஆச்சர்யமாக! அதுவரை 65-70 சதவீதம் எடுத்துவந்த பெண்,தற்போது 80 திற்கு மேல் எடுத்திருக்கிறது! ஊக்கம்!
2.கிட்ட தட்ட இதே நிலைமையில் இருக்கும்  திண்டிவனத்தை  சேர்ந்த இன்ஜினியரிங் படிக்கும்  மாணவனுக்கும்  இரண்டு  செமஸ்டருக்கு  பணம் அனுப்பியுள்ளேன்.அவன் கொஞ்சம் சுமாராய் தான் படிக்கிறான்,இனி நன்றாக படிப்பான் என்று நம்புகிறேன்.இது இல்லாமல் வேறு இரண்டொரு பெரும் என்னை தொடர்பு கொண்டார்கள் ஆனால் அவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. 
ஆகவே
இதைப்படிக்கும் உங்களுக்கு தெரிந்த யாரவது இருந்தால்,அவர்களுக்கு உண்மையாகவே உதவி வேண்டி இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.நான் தனியாள் தான் என்னுடைய சம்பளத்தை தவிர எனக்கு வேறெதுவும் வருமானம் இல்லை ஆகவே ஐந்து,ஆறு பேர் தொடர்பு கொண்டால் அதிலிருந்து ஒருவரைதான் என்னால் தேர்வு செய்ய முடியும்.மேலும் படிப்பு விஷயம், உண்மையாகவே  கஷ்ட  ஜீவனம் என்றால் மட்டுமே என்னால் உதவி செய்ய முடியும்,மருத்துவ உதவி என்றால் ஒரு லம்ப் அமௌண்ட் தேவைப்படும்,அதனால் உறுதியாக சொல்ல முடியாது.
மொபைல்      :91 9663001111
மெயில் ஐடி : ahamed.ibrahim7@gmail.com
குறிப்பு: சொந்தங்களில் சில நிறைய நகை போட்டு,பணம் போட்டு திருமணம் செய்ய முற்படுவார்கள் அதற்க்கு உதவி கேட்பார்கள்.ஏம்ப்பா உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா? (இதை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்)
அன்புடன்
நான்

5 Responses so far.

 1. krish says:

  sorry,இன்றுதான் படித்தேன்.அருமை.
  மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

 2. Ibrahim A says:

  வருகைக்கு நன்றி க்ரிஷ் .....பிறந்து ரொம்ப நாள் வாழ்ந்த பிறகு திடீரென்று ஒரு நாள் தோன்றக்கூடும்,இங்கே வந்ததிலிருந்து என்ன சாதித்திருக்கிறோம் என்று.....அதிலிருந்து தப்பும் முயற்சி தான் இது

 3. அண்ணா எனக்கு கடவுள் நம்பிக்கை அந்த அளவுக்கு இல்லை
  உங்களால் உதவி பெற்றவற்களுக்கு நீங்கள்தான் கடவுள்.
  உங்களை போள்றவற்களை நினைக்கையில்தான் கடவுள் நம்பிக்கை வருகிறது
  எனக்கும் உங்கள் உதவி தேவை படுகிறது மருத்துவ செலவிற்காக என்னுடைய விவரத்தை மெயில் பன்றேன் உங்களால் முடிந்த உதவி செய்யவும் .

 4. அண்ணா எனக்கு கடவுள் நம்பிக்கை அந்த அளவுக்கு இல்லை
  உங்களால் உதவி பெற்றவற்களுக்கு நீங்கள்தான் கடவுள்.
  உங்களை போள்றவற்களை நினைக்கையில்தான் கடவுள் நம்பிக்கை வருகிறது
  எனக்கும் உங்கள் உதவி தேவை படுகிறது மருத்துவ செலவிற்காக என்னுடைய விவரத்தை மெயில் பன்றேன் உங்களால் முடிந்த உதவி செய்யவும் .

 5. அண்ணா எனக்கு கடவுள் நம்பிக்கை அந்த அளவுக்கு இல்லை
  உங்களை போன்றவர்களை நினைக்கும்போதுதான் கடவுள் நம்பிக்கை வருகிறது
  எனக்கும் உங்கள் உதவி தேவைபடுகிறது மருத்துவ செலவிற்காக உங்களால் முடிந்த உதவியை செய்யவும்
  உங்களால் உத

- Copyright © துளி கடல் -